20160227

சுக்கு

sitthars





1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.


4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

தாங்கமுடியாத வலி மூட்டு வலி

         

இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.

இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில தாய் கரையான் அந்த இடத்தில இருந்து புற்று மீண்டும் உடனே கட்ட தொடங்கி விடும்.

இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து விடும்.


சரி நாம விடயத்திற்கு வருவோம்.

ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு . இரண்டு பல்லு பூண்டு.

அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைகிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும்.

நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார்.

நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும்.

மூன்று நாள் போதும்.
மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம்.
வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும்.

தாங்கமுடியாத வலி உள்ளவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும்.

குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில பத்து போடவும்.

அப்பிரேக செந்தூரம்



நீரழிவு என்ற சர்க்கரை நோய் குணமாக அப்பிரேக செந்தூரத்தை ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும்.

அப்பிரேக செந்தூரத்தினால் குணமாககூடிய நோய்களாக சித்தர்களால் குறிப்பிட பட்டுள்ளாதாவது,
சயம் 8
ஈளை இருமல்
சேத்தும நோய் 96

இச்செந்தூரத்துடன் சஞ்சீவி சூரணத்தை சேர்த்து சாப்பிட மேக, நீரழிவு நோய்கள் இருபத்தி ஒன்றும் (21 வகை நோய்) குணமாகும்.

தேகத்தின் மாந்தை நோய், பிரமிய நோய், உட்சூடு மற்றும் எரிவு நோய் எல்லாம் சரி செய்து தேகமானது குளிர்சியுரும்.

விந்து பலம் பெரும், எலும்புரிக்கி நோய் ( எய்ட்ஸ் ) குணமாகி கண்கள் குளிர்ச்சியாகி தேகம் ஆரோக்கியம் பெரும்.


ஒண்ணாத செந்தூர மேடுத்துக்கொண்டு
உத்தமனே பணவிடைதான் தேனிற்கொள்ள
வண்ணாத வாதசயம் பித்தசயம் ரெண்டும்
வளமான சிலேட்டுமத்தின் சாயமும் போகும்
கண்ணாத கோவெண்ணெய் தன்னிற்கொள்ள
கைகடந்த மேகமது யிருபத்தொன்றும்
அண்ணாத ஆக்கைதனை விடுவோடும்
அப்பனே செந்தூர மருமைகாண

காணப்பா நீரிழிவு வலிமேகங்கள்
கண்மணியே நீரெரிவு நீர்ச்சுக்கு
வாணப்பா கல்லடைப்பு சதையடைப்பு
வளமான நீரடைப்பு நீர்ப்பாச்சல்குத்தல்
ஆணப்பா கிரந்தியுடன் புண்கள் சூலை
அரையாப்பு குட்டமுடன் குலைநோயெல்லாம்
மாணப்பா மதிமயங்கி யோடிப்போகும்
மகத்தான பிணிநோய்கள் மாண்டுபோமே

குடற்புழுக்கள் நீங்கிட..!


குழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.