20160303

ஸுதர்சன சூர்ணம்



மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்
(ref-சாரங்கதர சம்ஹித - மத்யமகண்டம்)


யார் சொன்னார்கள் -ஆயுர்வேத சித்த மருந்துகள் வேலை செய்ய தாமதம் ஆகும் என்று ?
சாதாரண காய்ச்சலுக்கு யார் ஆயுர்வேத சித்த மருந்துகளை நாடி வருகிறார்கள் ?-விரல் விட்டு எண்ணக்கூடிய நோயாளிகளை தவிர ..
(ஆனால் என்னிடம் காய்ச்சலுக்கும் பெரியவர்களும் ,பச்சிளம் குழந்தைகளும் ஆயுர்வேத வைத்தியம் பெற என்னிடம் வருவதுண்டு )

ஆயுர்வேத மருந்தில் காய்ச்சலை ஊசி மருந்தை விட வேகமாக குறைக்கும் மருந்து வேண்டுமா நண்பர்களே ?
அது இந்த சுதர்சன சூர்ணம் தான் அது ..



தேவையான மருந்துகள்:


1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக் 10 கிராம்
2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீபலத்வக் 10 “
3. நெல்லிமுள்ளி – ஆமலகீபலத்வக் 10 “
4. மஞ்சள் – ஹரீத்ரா 10 “
5. மரமஞ்சள் – தாருஹரீத்ரா 10 “
6. கண்டங்கத்திரி – சண்டகாரீ 10 “
7. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 10 “
8. கிச்சலிக் கிழங்கு – ஸட்டீ 10 “
9. சுக்கு – சுந்தீ 10 “
10. மிளகு – மரீச்ச 10 “
11. திப்பிலி – பிப்பலீ 10 “
12. மோடி – பிப்பலீமூல 10 “
13. பெருங்குரும்பை – மூர்வா 10 “
14. சீந்தில் கொடி – குடூசீ 10 “
15. சிறுகாஞ்சூரி – துராலபா 10 “
16. கடுகரோஹிணீ – கடுகரோஹிணீ 10 “
17. பர்பாடகம் – பர்பாடக 10 “
18. கோரைக்கிழங்கு – முஸ்தா 10 “
19. நீர் பிரம்மி (காய்ந்தது) – நீர்ப்ரஹ்மி 10 “
20. குருவேர் – ஹ்ரீவேர 10 “
21. வேப்பம் பட்டை – நிம்பத்வக் 10 “
22. புஷ்கரமூலம் – கோஷ்ட 10 “
23. அதிமதுரம் – யஷ்டீமது 10 “
24. வெட்பாலைப்பட்டை – குடஜத்வக் 10 “
25. ஓமம் – அஜமோதா 10 “
26. வெட்பாலை அரிசி – இந்த்ரயவ 10 “
27. கண்டுபாரங்கி – பார்ங்கீ 10 “
28. முருங்கை விதை – சிக்ருபீஜ 10 “
29. படிகாரம் – ஸ்படிக 10 “
30. வசம்பு – வச்சா 10 “
31. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 10 “
32. பதிமுகம் – பத்மக 10 “
33. விளாமிச்சம் வேர் – உஸீர 10 “
34. சந்தனம் – சந்தன 10 “
35. அதிவிடயம் – அதிவிஷா 10 “
36. சித்தாமுட்டிவேர் – பலாமூல 10 “
37. மூவிலை – ப்ரிஸ்னீபார்ணீ 10 “
38. ஓரிலை – சாலிபர்ணீ 10 “
39. வாயுவிடங்கம் – விடங்க 10 “
40. கிரந்திதகரம் – தகர 10 “
41. கொடிவேலிவேர் – சித்ரக 10 “
42. தேவதாரு – தேவதாரு 10 “
43. செவ்வியம் – சவ்ய 10 “
44. பேய்ப்புடல் இலை – பட்டோல 10 “
45. ஜீவகம் – ஜீவக 10 “
46. ரிஷபகம் – ரிஷபக 10 “
47. இலவங்கம் – லவங்க 10 “
48. மூங்கிலுப்பு – வம்ஸலோசன 10 “
49. தாமரைக்கிழங்கு – பத்மமூல 10 “
50. காகோலீ – காகோலீ 10 “
51. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 10 “
52. ஜாதிபத்திரி – ஜாதீபத்ரி 10 “
53. தாளீசபத்திரி – தாளீசபத்ர 10 “
54. நிலவேம்பு – பூநிம்ப 10 “








குறிப்பு:


ஜீவகம், ரிஷபகம் இவைகளின் மாற்றுச் சரக்காக பால் முதுக்கன் கிழங்கு மற்றும் சீந்தில் கொடி மொத்தம் இரண்டு பங்கும், காகோலியின் மாற்றுச் சரக்காக (பிரதிநிதி திரவ்யம் alias substitute drug) அமுக்கரா கிழங்கு ஒரு பங்கும் சேர்க்கவும்.


செய்முறை:


படிகாரத்தைத்
தவிர்த்து மற்ற சரக்குகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். படிக்காரத்தைப்
பொரித்துப் பொடித்து சலித்து சூர்ணத்துடன் ஒன்று சேர்த்து நன்கு கலக்கவும்.




அளவு:


1 முதல் 4 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


தீரும் நோய்கள்:






தாதுக்களில் தங்கிய காய்ச்சல் எனப்படும் தாதுசுரம் (தாதுகாத ஜ்வர), குளிர் சுரம் போன்ற நச்சுக்காய்ச்சல்கள் (விஷமஜ்வர) மற்றும் பல வித காய்ச்சல்கள் (ஜ்வர), யானைக்கால் (ஸ்லீபாத), வயிற்றுப் பூச்சி (க்ருமி),தோல்நோய்கள் (சர்மரோக).


தெரிந்து கொள்ளவேண்டியது







இப்போது சுதர்சன சூர்ணம் -மாத்திரை வடிவிலும் கிடக்கிறது
பொதுவாக காய்ச்சலுக்கு முதல் வைத்தியம் -வயிற்றுக்கு பட்டினி போடுவது
நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் படம்


















சவால்
உடனடி காய்ச்சல் விட -லிங்க செந்தூரம் -ஒரு மிளகு எடை அளவுக்கு எடுத்து
-சுதர்சன சூர்ணம் ஐந்து கிராமில் கலந்து கொடுக்க -நீங்கள் காய்ச்சல்
வந்தவர்களுக்கு ஊசி போட்டால் எவ்வளவு வேகமாக குறையும் என்று நம்புகிறீர்களோ
-அந்த நேரத்தை விட சீக்கிரமாக காய்ச்சலை நீக்கும் என்பது எனது அனுபவம்

கண் குளிர்ச்சி பெற

வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்



* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.



* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.



* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.



* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.



* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.



* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.



* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.



* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

நீரிழிவு

. மேகநாதத் தைலம்


புங்கம் பட்டை அழிஞ்சிப் பட்டை பிராயம் பட்டை எட்டிப் பட்டை மாம் பட்டை ஒதியம் பட்டை இலுப்பைப் பட்டை சங்கம் பட்டை புரசம் பட்டை சுரப் புன்னைப் பட்டை
நூற்றாண்டு வேம்பின் பட்டை
ஊழலாத்திப் பட்டை
முதிர்ந்த பூவரசன் பட்டை
நிலவிளாப்பட்டை சிவனார் வேம்புப் பட்டை


இவை வகைக்கு 10 பலம் நன்றாக இடித்து ஒரு பாண்டத்தில் சேர்த்து ஒரு குறுணி நீர் விட்டு அடுப்பில் இட்டு நன்றாகக் குழம்பாக வெந்த பின்பு அதில்


ஆடுதீண்டாப்பாளைச் சாறு கழற்கொடிச் சாறு சங்கன் குப்பிச் சாறு செருப்படைச் சாறு கொட்டைக் கரந்தைச் சாறு பொடுதலைச் சாறு


இவை வகைக்கு 1/4 படி எடுத்து மேற்படிச் சாற்றுடன் சேர்த்து அடுப்பில் வைத்துச் சுண்டிக் குழம்பு பாகம் அடையும் பொழுது நல்லெண்ணெய் 2 படி சேர்த்துப் பறங்கிப் பட்டை 2 பலம் பொடித்துப் போட்டு,


சுத்தித்த சேங்கொட்டை 1 பலம் இடித்துப் போட்டு,


மெல்ல எரித்து அடி பற்றாமல் மெழுகு பதத்தில் இறக்கி வைக்கவும்.


அளவு: முட்டைக் கரண்டி அளவு 2 வேளை கற்கத்துடன் கொடுக்கவும்.


தீரும் நோய்: கால், கை முடக்கு முதலான வாத நோய்கள் புற்று தோல் நோய்கள் அரையாப்பு நீராம்பல் பெருவயிறு பாண்டு மதுமேகம் போன்றவை குணமாகும்.


பத்தியம்: உப்பு மொச்சை பாசிப்பயறு துவரை முளைக் கீரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். 5 நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு மூழ்கலாம்.


நீரிழிவு நோய்க்கும் இம்மருந்தை வழங்கலாம். முட்டைக் கரண்டியளவு 2 வேளை கற்கத்துடன் வழங்க வேண்டும். பத்தியம் தேவை. 5- நாள் மருந்து உண்டு பின்னர் பசுமோர் கூட்டலாம். 15 நாள் சென்ற பின் எண்ணெயிட்டு முழுகலாம்.

-சித்த வைத்திய திரட்டு




2 . அப்பிரகப் பற்பம்

சுத்தி செய்த கிருஷ்ணா அப்பிரகம் 1 பலத்தை
ஒரு பாத்திரத்தில் இட்டு மருதோன்றி வேர் 16 பலத்தை இடித்து வேறொரு பாண்டத்தில் இட்டு, 64 பலம் தண்ணீர் விட்டு, அடுப்பேற்றிச் சிறுக எரித்து
4-இல் 1 பங்கான 16 பலமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு,
நாளோன்றுக்கு 2 பலம் வீதம் அந்த அப்பிரகத்தில் 8 நாள் வார்த்து ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.

அது நன்றாய் உலர்ந்த பிறகு, அந்த அப்பிரகத்தை நிறுத்து அப்போதிருக்கும் எடைக்கு 2 பங்கு கடப்பம் பிசின் சேர்த்து, அந்த 2 பங்கு பிசின் ஆறி ஒரு பங்காய் குறைந்த பிறகு, முன்போல நாள் ஒன்றுக்கு 2 பலம் வீதம் குப்பை மேனிச் சாற்றை 8 நாள் வரைக்கும் விட்டு ஊற வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.

உலர்த்திய பின் அந்த அப்பிரகத்தை கல்வத்தில் இட்டு, அப்பிரக எடைக்கு 2 பங்கு வேப்பெண்ணெய் தினமும் விட்டு, அப்படி 6 நாள் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தும் போது, வில்லையை நிறுத்துக் கொண்டு, அந்த எடைக்குச் சரி எடை ஏறும்படி 3 நாள் வரைக்கும் அத்திப்பாலை அந்த வில்லைக்கு அடித்து உலர்ந்த பின் அதை அகலில் இட்டு சீலை செய்து 60 வறட்டியில் புடமிட்டு நன்றாக ஆறின பின்னர் எடுத்தால், வெண்மையாய் இருக்கும்.

அளவும் அனுபானமும்: இப்பற்பத்தை 1 முதல் 2 குன்றியளவில் நெய்யிலாவது, வெற்றிலைச் சாற்றிலாவது அனுபானித்து 1 மண்டலம் வழங்கலாம்.தீரும் நோய்கள்: நீரிழிவு நோய் பிளவை மகோதரம் உன்மாதம் சுரம் விரைவாதம் முதலியன நீங்கும்.


பத்தியம்: புளி, புகையிலை, பெண்போகம், கடுகு, மதுபானம், அகத்திக்கீரை ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தீர்வு: சரியான முறையில் சுத்திகரித்துத் தயார் செய்த இப்பற்பம் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. சுத்தியோ, செய்முறையோ சரியாக இல்லாவிடின் மருந்தீட்டால் உண்டாகும் கெடுதி போல துன்பம் விளைவிக்கும். அதுசமயம் மறுதோன்றி சுக்குக் குடிநீர் அருந்தினால் அத்துன்பம் நீங்கும்.

-சித்த வைத்திய திரட்டு




3 . பிரமேகத்திற்கு குடிநீர்


வேப்பம் பட்டை ஆமலகத்தோடு பேய்ப்புடல் சீந்தில்


இவைகளைச் சம அளவெடுத்துக் குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ளப் பித்தப் பிரமேகம் தீரும்.

-ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்



4 . பிரமேக நோய்க்கு குடிநீர்


ஆவாரை வேர்ப்பட்டை வேம்பு மருது கருங்காலி வேங்கை கடலிராஞ்சி இவைகளின் பட்டை முருங்கை வித்து கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் முத்தக்காசு பொன் முசுட்டை தேற்றான் கொட்டை


இவைகளை உடனுக்குடனே குடிநீர் செய்து தேன் விட்டு உட்கொள்ள பிரமேகம் தீரும்.

-ஆத்மரட்சாமிர்த வைத்திய சார சங்கிரகம்



5 . வேப்பன் பிசின் சூரணம்


வெகு நாள் சென்ற வேப்ப மரத்தின் பிசினைக் காய வைத்து இடித்த தூள், வறுத்த சாமை அரிசி மாவு.


இவை இரண்டையும் சமமாகக் கலந்து வெருகடியளவு சூரணம் உட்கொள்ளலாம். காலை மாலை 2 வேளை 1 மண்டலம் உண்ணவும்.

தீரும் நோய்: நீரிழிவு குணமாகும்.

-மேக நிவாரணி போதினி

6 . மேகாதிக் குளிகை
உலர்த்தின இளந்தென்னம் பாளைப் பொடி மஞ்சள் கடுக்காய்த் தோல் நெல்லி முள்ளி தான்றிக்காய்த் தோல் - இவை வகைக்கு 8 பலம் பருத்திக் கொட்டைப் பருப்பு வெள்ளைக் குன்றிமணி பருப்பு புளியங்கொட்டைத் தோல் தேற்றான் கொட்டை சீவல் கற்கடக சிங்கி - வகைக்கு 2 பலம் நிலப்பனைக் கிழங்கு கறிமஞ்சள் மரமஞ்சள் கஸ்தூரி மஞ்சள் கொடிவேலி வேர்ப்பட்டை கருவேலம் பிசின் வெள்வேலம் பிசின் விளாம் பிசின் கருங்காலி பிசின் - வகைக்கு 6 1/4 வராகன் எடை வேப்பம் பிசின் 1/8 வராகன் எடை


இவை எல்லாவற்றையும் ஒன்றாக இடித்து வஸ்திரகாயம் செய்து கொள்ளவும்.சுத்தி செய்த நெல்லிக்காய் கந்தகம் 3 1/4 பலம் சுத்தி செய்த இரசம் 1 பலம் கிருஷ்ணா அப்பிரகச் செந்தூரம் 1 1/4 பலம்


இரசத்தையும் கந்தகத்தையும் சேர்த்து, கறுத்து மை போலாகிற வரையில் அரைத்துப் பின்னர் மேற்படி அப்பிரகச் செந்தூரத்தைச் சேர்த்து அரைத்து முன் சித்தப் படுத்தின சூரணத்தையும் சிறுகச் சிறுகப் போட்டுச் சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்த பின்ன எடுத்து அம்மியில் வைத்து,ஆவாரம் சாற்றால் 1 நாளும் மருத இலைச் சாற்றால் 1 நாளும் இலந்த இலைச் சாற்றால் 1 நாளும் அரைத்து, இலந்தைக் காயளவு உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


அனுபானம்: வேளை 1க்கு ஒரு குளிகையாக தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

தீரும் நோய்: தினம் காலை மாலை 2 வேளையாக உண்டு வர நீரிழிவு தீரும்.

-மேக நிவாரணி போதினி



7 . கடலழிஞ்சில் பட்டை இலேகியம்

1 வீசை கடலழிஞ்சில் பட்டையைப் பஞ்சு போல் இடித்து ஒரு பாண்டத்தில் இட்டு 8 படி நீர் விட்டு 1 படியாக வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

1 படி பருத்திக் கொட்டையை ஒரு நாள் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் உரலில் இடித்து, அப்பால் ஆட்டுக் கல் உரலில் போட்டு நீர் தெளித்துக் குளவியைக் கொண்டு ஆட்டி வழித்தெடுத்துச் சீலையில் வைத்துப் பிழிந்து பால் வாங்கவும். மீண்டும் திப்பியை உரலில் ஆட்டி முன் போல் பால் வாங்கவும். இப்படி 1 படி பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின் உலர்ந்த வன்னியிலை அத்திப் பிஞ்சு ஆவாரம் பட்டை கசகசா சுக்கு வேப்பம் பட்டை கிராம்பு ஓமம் கொத்துமல்லி சாதிக்காய் சிறுநாகப்பூ ஏலம் சடாமாஞ்சில் கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் மரமஞ்சள் வகைக்கு பலம் ஒன்றாக, இடித்து சூரணம் செய்து வைத்துக் கொள்ளவும்.


பின் கடலழிஞ்சில் பட்டை கியாழத்தையும் பருத்திக் கொட்டைப் பாலையும் ஒரு பாத்திரத்தில் இட்டு, 2 வீசை வெள்ளைச் சர்க்கரையைப் போட்டுக் கரைத்து அடுப்பில் ஏற்றிப் பாகுபதம் வரும் சமயம் முன் சூரணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி கீழ் இறக்கிப் போதிய அளவு நெய், தேன் விட்டு கிளறி வைத்துக் கொள்ள வேண்டும்.

அளவு: இந்த இலேகியத்தை அந்தி சந்தி கழற்சிக்காய் அளவு கொடுத்து வரவும்.

தீரும் நோய்: மதுமேகம், நீரிழிவு நீங்கும்.

-சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம்

8 . கோமூத்திரச் சிலாசத்து

இது வெயில் காலத்தில் மலைகளின் இடுக்குகளிலிருந்து உருகி வெளியாகும் சத்து. இதை எடுக்கும் போது மண் கலந்திருக்கும். ஆதலால் 10 பலம் கோமூத்திரச் சிலாசத்தை வெந்நீரில் நன்றாகக் கலக்கி ஒரு வாயகன்ற பீங்கான் கோப்பையில் இட்டு வெயிலில் வைத்து அப்போதைக்கப்போது மேல் கட்டுகின்ற ஆடையை வழித்து ஒருங்கு சேர்த்துக் காயவைத்துப் பத்திரப்படுத்துக. இதுவே உயர்ந்த ரகமானதாகும்.

அதிலுள்ள மண்மாவும் அடியில் நின்றுவிடும். இதைப்போலவே வெந்நீருக்குப் பதிலாக திரிபலைக் கியாழம் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவற்றில் ஒன்றைக் கரைத்து வெயிலில் வைத்து மேல் கட்டுகின்ற அடையைச் சேகரிப்பது உண்டு.

அளவு: இதில் வேளைக்கு 1/2 முதல் 3 குன்றி சிறிது நெய்யுடன் சேர்த்து அனலில் காட்டி மத்தித்து தினம் 2 வேளை சாப்பிடலாம்.

ஆரம்பத்தில் 1/2 குன்றியளவு கொடுத்து நோய் குணமாகாவிடில் போகப் போக அளவினை அதிகப்படுத்தி 3 குன்றியளவு வரை கொடுக்கலாம்.தீரும் நோய்: மதுமேகம் கல்லடைப்பு ஈரல் நோய்கள் குன்மம் பெரும்பாடு முதலியன நீங்கும்.

அடிக்கடி தலைவலி




. சுரம், தலைவலிக்குக் குடிநீர்



ஆடாதோடை - 1 பங்கு
 வேப்பந்தோல் - 1 பங்கு
 சுக்கு - 1 பங்கு
 பற்பாடகம் - 1 பங்கு
 சந்தனம் - 1 பங்கு
 வெட்டி வேர் - 1 பங்கு
 முத்தக்காசு - 1 பங்கு
 விலாமிச்சு - 1 பங்கு
தண்ணீர் - 8 பங்கு
 இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.

 தீரும் நோய்கள் - வெதுப்பு, தலைவலி, சன்னி.


-

மருந்துகளின் மூலங்கள்


சித்த மருந்துகள் செய்வதற்கு மூலப் பொருள்களாக அமையும் மருந்துகளை வைத்து சித்த மருத்துவத்தின் சிறப்பினை அறியலாம்.
அவை வருமாறு,
1. உப்பு வகைகள் – 25
2. உலோகங்கள் – 12
3. உபரசங்கள் – 120
4.பாஷாணங்கள்-64
5.மூலிகைகள் - 1008
6.கடை மருந்துகள் - 64
ஆகும்.
இவை, பல்வேறு முறைகளில் மருந்தின் மூலப் பொருள்களாக அமைந்து நன்மருந்தாகி நோயைப் போக்கப் பயன்படுகின்றன.இவ்வாறு எந்த மருத்துவத்திலும் இல்லாத அளவு சித்த மருத்துவத்தில்1293 எண்ணிக்கைகள் கொண்ட மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருத்துவத்தில்
1. உப்பு, 2. பாடாணம், 3. உபரசம், 4. இரசம், 5. உலோகம், 6. கந்தகம் என ஆறு முறைகள் பின்பற்றப் படுகின்றன. மேலும் கட்டு, செந்தூரம், களங்கு, மெழுகு, தேன் போன்றவை ஆண்டுகள் பல ஆனாலும் வீரியம் கெடாமல் இருக்கும் மருந்துகளாகத் தயாரிக்கப் படுகின்றன. மற்ற மருத்துவ முறைகளில் இல்லாத வகையில் பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிக்கப் படுவது சித்த மருத்துவ முறையில் மட்டுமே
பாதரசத்தைப் பயன்படுத்தி மருந்து செய்யும் முறைகளாவன,

1. இரசம் செய்முறை
2. இரசக் செந்தூரம் செய்முறை
3. வீரம் செய்முறை
4. பூரம் செய்முறை
5. அரிதாரம் செய்முறை

இயற்கையில் கிடைக்கக் கூடிய பாஷாணங்கள் 32 ஆகும். அவற்றைக் கொண்டு, வைப்புமுறை என்னும் செய்முறைகளால் மேலும் 32 பாஷாணங்கள் சித்தர்களால் செய்யப்பட்ட செயற்கைப் பாஷாணங்கள்
மருந்துகளுக்கும் மருந்துகளைச் செய்வதற்கும் பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், சித்த மருத்துவம் எல்லா நிலைகளிலிருந்தும் ஆராயப் பெற்றவை எனக் கொள்ளலாம். விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகளும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

நல்ல பாம்பின் விஷத்தை எடுத்து, சூதம் ஒரு கழஞ்சு அந்த விஷத்துடன் கலந்து, வாலுகையில் ஒரு நாழிகை எரித்தால் சூதம் (ரசம்) கட்டும். அச் சூதக்கட்டு குருவாகும். அதனால் ஒன்பது வகையான உலோகங் களையும் உருக்கலாம் என்பர். இதனால், மருந்தாகப் பாம்பின் நஞ்சையும் பயன்படுத்தும் நிலையில் மருத்துவம் உயர்ந்திருப்பதை உணரலாம். அதேபோல, ஆனைத்தந்தம், குதிரைக் குளம்பு, ஒட்டகப் பிச்சு, கழுதை அமுரி, பன்றிக்குட்டி, நாய் மூளை, நரி மாமிசம், குரங்கு பிச்சு, ஓணான் பிச்சு, கெருடன் முட்டை, செம்போத்து, மயில் நெய், கிளியிறகு, நாணுவான் முட்டை, சக்கிர வாகம், அன்னம்–காக்கை முட்டை, கோழிமுட்டை, ஆந்தை–குயில் முட்டை, காட்டுப் புறா எச்சம், வீட்டுப் புறா எச்சம், தாரா முட்டை, ஊர்க்குருவி விந்து, அளுங்கு–உடும்பு நெய், முதலை நெய் , ஆமை, கல்லாமை, கட் டெறும்பு, பூனாகம், இந்திர கோபம், கரு நாகப் பாம்பு, நாகப்பாம்பு போன்றவை மருந்து செய் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்




அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.
இவ்வாறு நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் லேகிய வகைகளில் ஒன்றான "இஞ்சி லேகியம்" தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் பிரம்மமுனி அருளிய “பிரம்மமுனி வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
சொல்லவே இஞ்சி லேகியத்தைக் கேளு
தோல்போக்கிப் பலம்பத்து நிறுத்துக் கொண்டு
பல்லவே பழச்சாற்றில் லாட்டி மைபோல்
மைந்தனே சட்டியிலே இட்டுக் கொள்ளே
அல்லவே சீரகமுமிள கோடே லமும்
அதிமதுரந் திப்பிலியும் கோஷ்டமூலம்
கல்லவே வாலுழுவை தாளிச்சப் பத்திரியுங்
கடுகொடு கொத்தமல்லி சித்திர மூலம்
பல்லவே சிங்கியொடு குரோசாணி ஓமம்
அப்பனே வகைவகைக்கு அரைப்பலம் தூக்கே
தூக்கியே கரிசாலை பூவரசம்பட்டை சாற்றால்
துவளையரைத்து முன்மருந்தோ டொக்கச் சேரு
ஊக்கமாம் பிரண்டையது மோரிலுப் பிட்டு
ஊறி உலர்த்திடித்து ஒருபலமே போடு
ஆக்கவே வங்காள சர்க்கரை யப்பா
அதில்பாதி போட்டபின்னே நெய்யை வாரே
நெய்வார்த்து லேகியமாய் பண்ணிக் கொண்டு
நேரமொரு பாக்களவு அந்திசந்தி கொள்ளு
பொய்யல்ல பித்தவாய்வு உஷ்ண காந்தி
பிரட்டல் சத்திவலி குன்மம் பித்தகுன்மம்
மெய்யான அஸ்திசுரம் சன்னி தோசம்
வீறான எரிகுன்மம் சீரண வாதஞ்
செய்யவே உப்பீசமும் அரோசிகமுந் தீரும்
தீவனமாம் பசியறிந்து சீராய்க் கொள்ளே
தோல் நீக்கிய இஞ்சி பத்துப்பலம் நிறுத்து எடுத்து, அதனைக் கல்வத்தில் இட்டு எலுமிச்சம் பழச் சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அதனை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் சீரகம், மிளகு, ஏலம், அதிமதுரம், திப்பிலி, கோஷ்ட மூலம், வாலுழுவை, தாளிச்சப்பத்திரி, கடுகு, கொத்தமல்லி, சித்திரமூலம், கற்கடக சிங்கி, குரோசாணி, ஓமம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து கல்வத்தில் இட்டு கரிசாலை, பூவரசம் பட்டை ஆகியவற்றின் சாறுவிட்டு மெழுகு பதத்தில் அரைத்து எடுத்து இஞ்சி சேகரித்த மண் சட்டியில் இதனையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டுமாம்.
மோரில் உப்புப் போட்டு கலந்து அதில் பிரண்டையை சிறுதுண்டுகளாக அரிந்து ஊறப்போட்டு நன்கு காயவைத்து எடுத்து *சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த சூரணத்தில் ஒருபலம் எடுத்து முன்னர் மருந்துக் கலவை சேகரித்த மண்சட்டியில் இட்டு அதனுடன் சம அளவில் வங்காள சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் அளவாக நெய் சேர்த்து லேகியமாக தயார் செய்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் ஏழு நாட்கள் தொடர்ந்து உண்டுவர பித்த வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, உஷ்ண காந்தி, புரட்டல், வாந்தி, வலிகுன்மம், சீரணவாதம் (செரியாமை), உப்பிசம், ருசியின்மை ஆகியவை குணமாகும் என்கிறார்.
மருந்துண்ணும் ஏழு நாளும் பத்தியமாக பசிக்கும் போது பசியின் தன்மை அறிந்து உண்ண வேண்டும் என்கிறார்.
*சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.

அனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.



நவலோக காயகல்ப வல்லாதி

1. சேங்கோட்டை
2. புரங்கி சக்கை
3. நெல்லி வற்றல்
4. தான்றிக்காய்(விதைபோககி)
5. சுக்கு
6. சிற்றறத்தை
7. சடாமஞ்சல்
8. லவங்கப்பட்டை
இவையாவும் நெய்யிலும் பாலிலும் சத்து எடுத்து கொள்ளவும்.

1. கடுகுரோஷpனி
2. வெட்பாலையரிசி
3. நிலப்பனங்கிழங்கு
4. சிவனார் வேம்பு
5. ஜாதிக்காய்
6. கிராம்பு
7. ஜாதிபத்ரி
8. மிளகு
9. ஒமம்
10. திப்பிலி
11. செவியம்(மிளகு கொடிவேர்)
12. கார்போக அரிசி
13. கொத்தமல்லி
14. வாய்விளங்கம்
15. கருஞ்சிரகம்
16. சித்தர் மூலம்
17. குங்குமப்பூ
18. வாலுளுவை அரிசி
19. கோருராசனை
20. அஸ்வகெந்தி
21. ராய்வரி
22. ஆவின் நெய்
23. ஆவின் பால்
24. நுயம் தேன்
நவலோகம் வகைக்கு

தீரும் நோய்கள்:

மேகம் 21ம்
தோல் நோய்கள்
குஷ;டம் 18ம்
வாயு 26ம்
பிரமியங்கள்(தேம்ல், வெள்ளைவிழுதல்)
நயனவாதம்
வாதம், பித்தம்
மூலச்சூடு
மூலவாயு(காற்று போகுதல்)
சுகல விஷக்கடிகள்
அனைத்து வித நோய்களும் தீர்ந்து உடல் காயகல்பமாகும்.

படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்.வெள்ளருகு சூரணம்




வெள்ளருகு 20 கிராம்
சங்கன் வேர்ப்பட்டை 20 கிராம்
சிவனார் வேம்பு 40 கிராம்
பறங்கிச்சக்கை 80 கிராம்

பறங்கிச்சக்கையை சிறு துண்டுகளாக்கி ஒரு பானையில் இட்டு பசும்பால் 1 லிட்டருடன் தண்ணீர் 1 லிட்டர் கலந்து எடுத்து 3ல்4 பாகம் சுண்டியபின் தண்ணீர் விட்டுக்கழுவி பறங்கிச் சக்கையை நன்கு வெயிலில் உலர்த்தவும். புpற சரக்குகளைத் தனிக்தனியே வெயிலில் உலர்த்தி, தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று கலந்து வைத்துக் கொள்ளவும். குடைசியாக 160 கிராம் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும்.

அளவு, அனுபானம்:
காலை- இரவு உணவுக்குப் பின் 1 முதல் 2 கிராம், தண்ணீரில் சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
படை, வண்டுக்கடி, தோல், நோய்கள் நீங்கும்

: 21 வகையான மேகநோய் ,சகலநோய்களும் நீங்கும். அப்ரேக் செந்தூரம்



கிருஷ;ண அப்ரேக்கட்டிகளை சுத்தித்து கால்பங்கு நெல்லுடன் கம்பளி மூட்டையைப் பிரிக்காமல், கைகளால் நன்கு பிசைந்து, ஊறிய அப்ரேக் அணுக்கள் துணி வழியே வெளியேறி, காடியிலே முற்றும் விழச் செய்து, சிலநாள் தெளியவைத்து அடியில் படியும் அப்ரேக் நவநீதத்தை வெளியிலில் உலர்த்தி எடுத்து 80 கிராம் வெங்காயம் 5 கிராம், வெள்ளைக் சாட்டாரணை வேரின்சாறு செல்லத்தக்க அளவு. ஆடாதோடை சாறு செல்லத்தக்களவு, ஆலம் விழுது கியாழம் செல்த்தக்களவு.

செய்முறை:
அப்ரேக் நவநீதத்துடன் வெங்காரத்தைச் சேர்த்துக் கல்வத்திலிட்டு, வெள்ளைச்சாட்டாணை வேர்ச்சாற்றினால் 3 மணிநேரம் அரைத்து, வில்லை தட்டி உலர்த்தி அகலிலிட்டு மேலகல் மூடி சீலைமண் செய்து 11ல்2 பங்கு சதுர அடிகுழியில் புடமிடவும். இப்படியாக 10 புடம் ஆடா தோடைச்சாற்றில் 10 புடம். ஆலம்விழுது கியாழத்தில் 10 புடம் ஆக அரைத்து, வில்லை தட்டி அகலிலிட்டு, கஜபுடமிட நல்லசெந்தூரமாகும்.

அளவு: 100 முதல் 200 மி.கிராம்: தினம் 2 வேளை, 1 மண்டலம்.
துணை மருந்து: பரங்கிப்படை சூரணம்: மார்க்கண்டேய சூரணம்: தேன்
தீரும்நோய்கள்: 21 வகையான மேகநோய்: மதுமேகம்: நீரழிவு: வெகுமூத்திரம்: மூத்திரக்கிரிச்சரம் முதலான சகலசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.

தங்க செந்தூரம்




தங்கம் 10 கிராம்: கந்தகம் 50 கிராம்: சுத்திசெய்த பூநாகம் 30 கிராம்: வெங்காரம் 30 கிராம். கோவையிலைச் சாறு செல்லத்தக்களவு.

செய்முறை: தங்கம் தவிர மற்ற சரக்குகளைக் கல்வத்திலிட்டு செம்முள்ளிக்கீரைச்சாறு, கோவையிலைச்சாறு விட்டு 48 மணி நேரம் அரைத்துக்காயவைத்துப் பொடி செய்து, தங்கத்தை மூசையில் வைத்து உருக்கி கண்விட்டாடும்போதெல்லாம் ஒவ்வொரு சிட்டிகை அளவு. மேற்படி சித்தப்படுத்தின பொடியை கிராசம் கொடுத்து வருக. மூசை பழுதுபடும் சமயமாயின், தங்கத்தை ஆறவிட்டுடெடுத்து, மறுமூசையிலிட்டு, மீண்டும் உருக்கி கண்விட்டாடும்போது, சிறுசெருப்படைச்சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து, வில்லைசெய்து, காய்ந்த பின், லேகல் மூடி சீலைமண் செய்து உலர்ந்தபின் 25 எருவில் புடமிடவும் இப்படி, 3 புடமிட மிக உயர்ந்த செந்தூரமாகும்.

அளவு: 25 முதல் 50 மி.கிராம் தினம் 2 வேளை, 1 மண்டலம்.

துணைமருந்து: தேன், நெய், பாதாம் அல்வா. சுpட்டுக் குருவி லேகியம்.

தீரும் நோய்கள்: ஆண்மையின்மை, துரிதஸ்கலிதம், விந்து நீற்றுப் போதல் இவைகளை நீக்கி அதிகப்படியான போக சக்தியினை உண்டாகும் 7 முதல் 10 நாட்களில் நன்கு பலன் தெரியும். எனினும் 20 நாட்களுக்காவது குறையாமல் சாப்பிட வேண்டும். சப்த தாதுகளும் வலுப்பெற்ற உடல் வலுவடைந்து முகப்பொலிவும் தேஜஸீம் உண்டாகி மேனி பொன்னிறம் பெறும்.

பத்தியம்:
பூரண குணம் ஏற்படும் வரை புளி, புகை, புணர்ச்சியின்றி நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு வருதல் நல்லதாகும்.

செதில் உதிரும் நோய்:



இது தோலின் மேல் சிவப்பு நிறத்தில் வட்டமாகத் தோன்றும். அதன்மேல் சிரங்கு போன்ற கொப்புளங்கள் தோன்றி பின் தலை, கை, கால், வயிறு பக்கங்களில் வெண்மை நிறத்துடன், செதில் செதிலாகத் தோன்றி, விரிவடையும். யூகி தனது நூலில் இதன் தன்மையை விரிவாக எழுதியுள்ளார். விற்போடகக் குஷ;டம் என்ற தலைப்பில் 468வது பாடலில்(குஷ;டரோக நிதானம் என்ற தலைப்பில்) 'புதுமையாய் சரீர மெங்கும் தினவு உண்டாகும். குனத்த விற்போடக குஷ;டந்தானே' என்று கூறியுள்ளார். அவரின் 517வது பாடலில் இந்த நோய் சாத்தியம் என்கிறார். இந்த நோய் உடல் முழுமைக்கும் பரவி துன்பத்தை கொடுத்தாலும் சேவகனார் தைலம் அவர்களை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது.

சேவகனார் தைலம் செய்முறை:


தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்


வெண்புள்ளி நோய் அறிதல்:

உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.
பிரிவு:1
• கார்த்திகைக் கிழங்கு 100 கிராம்
• காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
• முதியார் கூந்தல் 100 கிராம்
• பிரப்பன் கிழங்கு 100 கிராம்
• பறங்கிப்பட்டை 100 கிராம்
• வெள்ளாட்டு சாணி 100 கிராம்

பிரிவு:2
• புங்கை எண்ணை 200 மி.லி
• வேப்ப எண்ணை 200 மி.லி
• இலுப்பை எண்ணை 200 மி.லி
• ஆடணக்கு எண்ணை 200 மி.லி
• நல்லெண்ணை 200 மி.லி

பிரிவு:3

• வெள்ளைப்பூண்டு சாறு 1லிட்டர்
• பெருங்காயம் 50 கிராம்
• சுக்கு 50 கிராம்
• மிளகு 50 கிராம்
• திப்பிலி 50 கிராம்
• கற்கண்டு 50 கிராம்
செய்முறை:
பிரிவு 1ல் குறிப்பிட்ட மூலங்களை நன்றாக இடித்து பட்டையை நன்றாக சிதைத்து, நூறு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, ஒரு மரத்து விறகால் எரித்து ஒரு லிட்டர் வரும் வரை நன்றாக எரிக்கவும். அந்த கசாயத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாணலில் ஊற்றி, அதில் பிரிவு 3ல் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களைக் கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்த பின்), 2ம் பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி, நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டைப் பொடி செய்து போட்டு, மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
மருந்தின் அளவு:
பெரியவர்களுக்கு 1 டீஸ்பூன்(5 கிராம்)
சிறியவர்களுக்கு 1ல்2 பாகம் டீஸ்பூன்(3 கிராம்)
மருந்துண்ணும் நெறி:
மருந்து உண்ணும் போது இறைச்சி, உலர்ந்த மீன், மொச்சை, கொள்ளு, புளி, புளிப்புச் சுவையுள்ள பழங்கள், பூசணி, கடுகு, எண்ணை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். உடலுறவு கூடாது.
குணப்படுத்த முடிவதும் முடியாததும்:
சேதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும். வெண்படை நோய் உடல் முழுமையும் பரவி, வெண்மையாகி, முழங்கால், கைகளில் கரடு ஏற்பட்டு புண்களாகி நீர்வடியும் பட்சத்தில் தீர்க்க முடியாது.

தாது பலவீனம் குணமாவது காமகேசரி மாத்திரை



காமகேசரி மாத்திரை


சரக்கு:
• மதனகாமப்பூ அரை பலம்
• ஜாதிக்காய் அரை பலம்
• முருங்கைவித்து அரை பலம்
• அரசம்வித்து அரை பலம்
• அதிமதூரம் அரை பலம்
• கிராம்பு அரை பலம்
• மராட்டிமொக்கு அரை பலம்
• ஆலம்வித்து அரை பலம்
• அத்திவித்து அரை பலம்
• அபினி அரை பலம்
• பதங்கம் கால் பலம்
• சாம்பிராணி கால் பலம்
• தங்க செந்தூரம் கால் பலம்
• விராகனிடை சால் பலம்
செய்முறை:
இங்கு கூறப்பட்டது 12 சரக்குகளில் இடித்து சூரணம் செய்ய வேண்டியவற்றை சூரணித்து இடித்து சரக்குகளுடன் தட்டிக் கல்வத்திலிட்டு முருங்கைப்பூச்சாறு விட்டு 4 சாமம் அரைத்து கடலை பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில் சீசாவில் பத்திரப்படுத்து.
பிரயோகம்:
இம்மாத்திரையை வேளைக்கு ஒன்றாக காலை மாலை காய்ச்சிய பசுவின் பாலில் தூள் செய்து போட்டுக்கலக்கி 40 நாள் உண்டு வருக.
தீரும்வியாதி:
தாது பலவீனம் குணமாவதுடன் தேக சக்திவுண்டாகும் கிரமமாக ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும்.

போகம் வெகு நேரமிருக்கும்.தாது புஷ;டி மாத்திரை




தாது புஷ;டி மாத்திரை

சரக்கு:
வாலைரசம் 3 விராகனிடை சுத்திசெய்த லிங்கம் 2 விராகனிடை
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து பிறகு சுத்தி செய்த எண்ணெய் வெங்காரம் 1 சுத்தி செய்த கஞ்சா அபின் இவைகள் வகைக்கு பலம் அரை சேர்த்து அரைத்து அத்துடன் கிராம்பு முருங்கை வித்து சாதிக்காய் சாதிபத்திரி கோரைக்கிழங்கு பூனைக்காலி விதை சாரப்பருப்பு பூமிசர்க்கரைக்கிழங்கு வகைக்கு அரைபலம் சூரணித்து வஸ்திரகாயஞ் செய்து சேர்த்து ஒரு முற்றின் தேங்காய்க்குள் அடைத்து சாணியால் கவசம் செய்து 10-15ல் எருவில் புடம் போட்டு எடுத்து தேங்காய் உடைத்து முருங்கைப்பூ சாற்றால் 3 சாமம் அரைத்து கழற்ச்சி காய் அளவு மாத்திரைகளாக்கி உலர்த்திவைத்துக் கொண்டு 1, 2 மாத்திரைகள் சூரணித்து சீனியுடன் சேர்த்துப்போட்டு காய்ச்சி உடனே சாப்பிடவும். இவ்விதமாக காலை மாலை இருநேரம் 20 நாட்கள்(அரை மண்டலம்) சாப்பிட்டால் விந்து ஸ்தம்பனமாகி இடுப்புவிடமாட்டாது போகம் வெகு நேரமிருக்கும்.

தாதுபுஷ;டி சுவர்ண மாத்திரை



சரக்கு:
தங்கபுஷ;பம், மதனபூ, அபின், கிராம்பு, சாதிக்காய், மாராட்டிமொக்கு, சாம்பிராணி, பரங்கம், முருங்கை வித்து, ஆலம்வித்து, அரசம்வித்து, அத்திவித்து, அதிமதூரம் இவையாவும் வகைக்கு 5 விராகனிடை.
செய்முறை:
இவைகள் 12ம் வகைக்கு 5 விராகனிடை சேர்த்து முருங்கைப்பூ சாற்றால் அரைத்து 5 கிரேன் எடை உள்ள மாத்திரைகளாக செய்து கொள்ளவும் அதாவது பெரிய குண்டுமணி அளவு மாத்திரைகளாக செய்யவும் தினம் காலை மாலை ஒவ்வொரு மாத்திரைகளாக சாப்பிட்டு உடனே பசும் பாலில்; முருங்கைப்பூ போட்டுக் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் விந்து ஊறி தம்பன சக்தியுண்டாகி தினம் 100 ஸ்திரீகள் நடுங்குவார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்டால் சிலருக்கு கரிகரிப்பு மயக்கம் உண்டாகும். ஆதலால் அவர்கள் குறைந்த அளவில் சாப்பிட வேண்டியது இம்மருந்து அனுபவத்தில் மிகச்சிறந்ததாக அறியப்பட்ட முறையாகும்.

(சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)மூசாம்பர மெழுகு




மூசாம்பர மெழுகு
(சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)

சரக்கு:
கரியபோளம் 1 விராகனிடை, பாவேந்திர போளம், 1-விராகனிடை, மிளகு கால் பலம், கறிமஞசள் கால் பலம், கருஞ்சீரகம் 1 பலம், கடுகு 1 பலம், பனைவெல்லம் 4 பலம்.
செய்பாகம்:
பனைவெல்லம் நீங்கலாக மற்றசரக்குகளை ஒரு சட்டியிலிட்டு இளஞ்சூட்டில் வெதுப்பி ஆறவிட்டு இடித்து கல்வத்திலிட்டு அதனுடன் பனைவெல்லம் கூட்டி அரைக்கவும். மெழுகுபதம் இல்லாது இருப்பின் தேனை துளித்துளியாக விட்டு 2 மணி நேரமரைத்து வழித்து சீசாவில் பத்திரப்படுத்தவும் வேளைக்கு 2 கடலை அளவு காலை மாலை 5 நாள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
ஸ்திரீகளுக்கு மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் வயிற்றுவலி அழுக்குசரியாக வெளிகாணாமல் இருப்பது குணமாகும். இந்தபிரயோகம் 5 மாதம் வரையில் வீட்டு விலக்கத்தில் கொடுக்கவும். சந்தான சித்தியுண்டாகும்.

மூலநோய் தீர்க்கும் மூலிகை மருத்துவம்



அறிமுகம்:
விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அச்சம் தரும் அளவு உலகில் பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நோயும் மனிதர்களுக்கு புதிது புதிதாகத் தோன்றி அச்சுறுத்துகிறது. வேகமான வாழ்க்கையில் மனிதன் மனிதத்தை இழந்து வருகிறான். நவீன உலகில், நவீன உணவில் மனிதனின் மனம் மட்டும் இறுகிப் போய்விடவில்லை, அவனின் மலமும் இறுதிப் போய்விட்டது. சித்தர்கள் நம்மை கடைப்பிடிக்கச் சொன்ன நாளுக்கு இரண்டு, வாரமிரண்டு, மாமிரண்டு, வருடமிரண்டு என்ற வழக்கம் மாறிப் போனதால் வந்த துன்பம் இது.
(பொதுவாக மனிதர்களுக்கு வரக்கூடிய (வரக்கூடாத) சிக்கல் இரண்டு அவை 1 மனச்சிக்கல், 2 மலச்சிக்கல். இதன் காரணமாக ஏற்படும் நோய்களில் முக்கியமானது மூலம் எனும் நோய், இது இரண்டு வகைப்படும்.)
1. ஆசன வாயின் மேல் பகுதியில் உள்ள மூலநோய்
2. ஆசன வாயின் கீழ் (அல்லது) வெளிப்பகுதியில் உள்ள மூலநோய்
ஆசன வாயின் கீழ்ப்பகுதியில் உள்ள மூல நோய்கள் மிகவும் பிரச்சினைக்குரியது. இம்மூலநோய் கடிக்காரத்தின் மூன்று மணி, ஏழு மணி, பதினோரு மணி என்று குறிக்கும் இடங்களில் ஆசன வாயின் அருகில் வரும்.
மூலநோய் அறிகுறிகள்:
ஆசனவாயில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வலியோடு கூடிய வீக்கம் இடுப்புப் பகுதியில் வலி, இரத்தம் கசிதல், மூலமுனை வறண்டோ, வழவழத்தோ, பெரிதாகவோ காணும் அஜீரணம், மலச்சிக்கல், வாயு, இருதய வலி.
மூலநோய் காரணங்கள்:
ஓன்றுக்கொன்று முரணான உணவு உண்ணுதல், நார்ச்சத்து குறைந்த உணவுகளை உண்ணல், அஜீரணம், தாய் தந்தை வழிப்பரம்பரை, குடிப்பழக்கம், அதிக உடலுழைப்பு, உடலுழைப்பு அறவே இல்லாதது, வெயில், தீ போன்றதில் அதிக நேரம் வேலை செய்வது.
இவைகளை சேர்த்து சிவப்பு பருத்திப்பூ சாற்றாலும் கற்றாழைச்சாற்றாலும் வகைக்கு ஒரு சாமம் அரைத்து உலர்த்தி சீலைமண்செய்து சென்ற காசிக்குப்பியில் போட்டு பலபக்கல்லால் மூடி சீலை மண் செய்து ஒரு சட்டியில் 5 விராகனிடை மணலைப்போட்டு அதன் மேல் மேற்படி குப்பியை வைத்து பின் குப்பியின் கழுத்து வரையிலும் மணலைக்கொட்டி சட்டியில் மூடி சீலைமண் செய்து தீபாக்கினியால் மூன்று நாள் எரித்து ஆறவிட்டு குப்பியை உடைத்து மருந்தை யெடுத்து அத்துடன் சாதிக்காய் பச்சைகற்பூரம் கிராம்பு சமுத்திரசோகை விதை வகைக்குவிரானிடை 1 கஸ்தூரி 4 குன்றிமணி எடை இவைகளை யெல்லாம் சேர்த்து வெற்றிலைச் சாற்றினால் அரைத்து குண்டு மணி அளவாய் உருட்டி மாத்திரைகளாக்கி தினம் காலை மாலை தாம்பூலத்துடன் 1 முதல் 2 மாத்திரை வரை சாப்பிட்டால் தாது புஷ;டி உண்டாகி அனேக ஸ்திரீகளை போகிக்க சக்தி உண்டாகும்.

நவமூலத்துக்கு மாத்திரை

சரக்கு:
சுக்கு கெந்தகம் இந்துப்பு ரசம் வெஙகாரம் இவையாவும் வகைக்கு 2 பலம் சுத்திசெய்த வாளம் 5 பலம்.
செய்முறை:
இவைகளை குமரிச்சாற்றில் (சோத்து கற்றாழை) அரைத்து குன்றி அளவாய் மாத்திரைகள் செய்து உலர்த்தவும் இந்த மாத்திரை 1 அல்லது 2 தேகத்திற்கு தக்கபடி வாழைப்பழம் தேன் நெய் இவைகளினால் அனுபானித்துக் கொடுக்க மூல மூளை வேரோடு கரைத்து விடும் 3 நாளைக்கு ஒரு தடவையாக 3 நாளைக்கு கொடுக்க மூல மூளை கரைந்து குணமாகும்.

சிறுநீரகக் கல்லடைப்பும் மூலிகை மருத்துவமும்



அதிகமான உடல்சூடு, உணவு, நீர் போன்றவற்றின் மாறுபாடு, இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து, உடல் நீர் வற்றி, சிறுநீரின் உப்புக்களையும் உறையச் செய்வதால் சிறுநீரகத்தில் கல்லடைப்பு ஏற்படுகிறது.
சிறுநீரகக் கல் சிறியதாக இருக்கும்போதே அதற்குரிய மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்வது சிறந்தாகும். முhறாகஈ பெரிதாக இந்த நோய் வளர்ந்து. கல்லின் அளவு பெரியதாகிவிட்டால் மூத்திரைப்பையின் அடிப்புறம் தாங்க முடியாத ஏற்படும். சிறுநீர் விட்டுவிட்டு வரும். சில நேரங்களில் கலங்கிய பழுப்பு நிறத்துடன், தாங்க முடியாத வலியுடன் சிறுநீர் வெளியேறும். வயிற்றில் ஏற்படும் இந்த வலி வயிறு முழுவதும் பரவி பிறகு இடுப்புப் பகுதியிலும் வலியை உருவாக்கி விடும்.
முற்றிய நிலையில் சிறுநீரகக் கல்லானது நீர்த்தாரையின் சுவர்களை சேதப்படுத்திவிடும். இந்த நிலையில் சிறுநீருடன் இரத்தமும் சேர்ந்து, அடர சிவப்பு நிறமாக வெளிவரும்.
மருத்துவம்:
சிறுநீரகக் கற்களைக் கரைத்து. வெளியேற்ற உடல் சூட்டைக் குறைக்கும் மருந்துகளையும் உணவு முறைகளையும் தொடர்ந்து உண்டு வரவேண்டும். மூலிகை மருத்துவத்தில் சிறுநெருஞ்சில், சிறுபீனை, நீர்முள்ளி, வாழைத்தண்டு போன்றவை சிறுநீரகக் கற்களை கரைப்பதிலும், சிறுநீரை நன்கு வெளியேற்றுவதிலும் உறுதுணை புரிகின்றன. இவற்றில் சிறுநெருஞ்சில், சிறுபீளை மற்றும் நீர்முள்ளி ஆகியவை சமூகக் குடிநீராக தினமும் எடுத்துக்கொள்ள உகந்தவை. குஷhயம் அல்லது நிழலில் உலர்த்தப்பட்ட சமூலத்தின் தூளாகவும்(வெந்நீருடன்) கொள்ளலாம். வுhழைத்தண்டு உணவில் தினமும் சேர்க்கலாம். வுhழைத்தண்டு சாறு 50 மி.லி அளவுக்கு மேற்படாமல் தினமும் குடித்துவர ஆரம்பநிலை சிறுநீரகக் கற்கள் குணமாகும் என்பது திண்ணம்.

விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும். தாதுபுஷ;டி லேகியம்





தாதுபுஷ;டி லேகியம்
சரக்கு:
திரிகடுகு 2 பலம், கசகசா 2 பலம், சாதிக்காய் 2 பலம், சாதிபத்திரி 2 பலம், நிலப்பானை கிழங்கு 2 பலம், வால்மிளகு 1 பலம், நீர்முள்ளிவிதை 10 விதை 10 பலம், பூனைக்காலி விதை 1 பலம், வெள்ளரிவிதை 1 பலம், வாய்விளங்கம் 1 பலம், கிராம்பு 1 பலம், தாமரைக்கிழங்கு 1 பலம் கருப்பு திராட்சை, வத்தல் 10 பலம், பாதம்பருப்பு 10 பலம், ஜப்ஜாவிதை 2 பலம், பேரிச்சங்காய் 2 பலம், ஸ்கல்விதை 2 பலம், பூமி சர்க்கரை கிழங்கு 2 பலம், அஸ்வகெந்தி 2 பலம், முந்திரிபருப்பு 1 பலம், அதிமதுரம் 1 பலம், அத்திவிதை, அரசம்விதை, ஆலம்விதை, தாமரைவிதை, முருங்கவிதை, ஆவாரம்பிசின், சோம்பு, லவங்கப்பத்திரி, சாரப்பருப்பு, லவங்கப்பட்டை, காமச்சர்க்கரை, கருவேலன் பிசின், முருங்கைப்பிசின,; கன்ன லவங்கப்பட்டை இவை வகைக்கு 1 பலம் அஸ்கா ஒன்னரை வீசை தேன் படி 1
செய்பாகம்:
இதனை லேகிய முறைப்படி செய்யவும். இது நல்ல லேகியம் மூளை இருதயம் நரம்பு முதலிய ராஜ கருவிகளுக்கும் புஷ;டிதரும் விந்து கட்டும் விந்து ஊறும் பலம்தரும்.





சிறுநீருடன் விந்து வெளியேறுதல் ஸ்வப்னஸ்கலிதம்

மேகமுட்கர் வடி
உபயோகம்:
20 வகையான மேக நோய்கள், சிறுநீருடன் விந்து வெளியேறுதல் ஸ்வப்னஸ்கலிதம், நீர் எரிச்சல், சிறுநீர்ப்பை அழற்சி, சிறுநீர் வெளிப்படும் போது வலித்தல் ஆகிய குறிகுணங்கள் நீங்கும்.
அளவு:
1 மாத்திரை காலையும் மாலையும் பாலுடன் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி எடுக்கவும்.


சூதகவலி,




ரஜப்பிரவர்த்தனி வடி
உபயோகம்:
சூதகவலி, சூதகம் ஏற்படும் முன் உண்டாகும் மனஉளைச்சல், இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி மற்றும் கால் தொடைகளில் வலி ஏற்படுதல், உள்ளங்கை, கால்களில் ஏற்படும் ஏரிச்சல் மற்றும் சூரகத்தடை இவைகளுக்கு நல்ல பலனனிக்கும்.

ஆண்குறித் தளர்ச்சி நீங்க:


ஓரிதல் தாமரை இலைகள் பச்சையாகப் பறித்து, பத்து இலைகள் வீதம் தினமும் சூரிய உதயத்திற்கு முன் கொடுக்கலாம். இதை 3 மாதங்கள் கொடுக்க குறித் தளர்ச்சி நீங்கும். (அல்லது)
ஓரிதல் தாமரை இலைத்தூள் காலை மற்றும் மாலை வேளைகளில் அரை தேக்கரண்டி அளவு மற்றும் கற்கண்டு 10 கிராமுடன் பசும்பால் கலந்து கொடுக்கவும்.
குறிப்பு:
மேற்கூறிய மருந்தை ஆண், பெண் வெள்ளைப்படுதலை நீக்கவும் கொடுக்கலாம்.

மலட்டுத்தன்மை கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்








வெள்ளருகு சூரணம்(வேறு)

வெள்ளருகு 100 கிராம்
மிளகு 10 கிராம்
வெள்ளருகை நிழலில் உலர்த்தி இடித்து, சூரணித்துக் கொள்ளவும். முpளகை நன்கு பொடித்துச் சலித்து இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அளவு, அனுபானம்:
மாவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் காலையில் மட்டும் ஒரு வேளை 1 கிராம் அளவு மருந்தை பசும்பாலுடன் சாப்பிட்டு வரவும். தொடர்ந்து 3-4 மாதங்கள் (மாரவிடாய்க் காலத்தில் மட்டும்) சாப்பிடவும்.
தீரும் நோய் : கர்ப்பக் கோளாறுகள் நீங்கி கரு தங்கும்.

விளக்கம்:
திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற முடியாத நிலை மலட்டுத்தன்மை எனப்படுகிறது.
பெண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
• கருக்குழாய், கற்பப்பை, யோனி ஆகிய இடங்களில் வாயு அடைப்பு
• கற்பப்பை வலுவின்மை
• கற்பப்பை சுருங்குதல்
• யோனி, கருக்குழாய், கற்பப்பை ஆகிய இடங்களில் சதை வளர்ச்சி
• போதை வஸ்துக்கள் எடுத்துக் கொள்ளுதல்.
• சீரற்ற மாதவிடாய்
• கர்ப்பத்தை தள்ளிப்போட உபயோகிக்கும் மருந்குகள்.
• கற்பப்பையில் உள்ள புழுக்கள் (இவை மலட்டுத்தன்மையைக் குணப்படுத்தத் தரப்படும் மருந்தின் குணத்தை சில சமயங்களில் முறியடித்துவிடும்).
குறிப்பு:
மலட்டுத் தன்மையில் பிரதானமாக இருக்கக்கூடிய தோஷ;ங்களை நோயானியின் வார்த்தையிலிருந்தும் நாடியிலிருந்தும் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவான பெண் மலட்டை
• ஆதி மலடு
• கரு மலடு
• காக்க மலடு
• கரலி மலடு
என்ற நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
ஆண் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்:
• விந்தணுக்கள் குறைவு
• ஆண்குறித் தளர்ச்சி
• விதைப்பையில் அடிபடுதல்
• பரபரப்பான நவீன வாழ்க்கை முறை
• மன நிம்மதி இல்லாமை
• நாள்பட்ட தைராய்டு பிரச்சினை
• சிறுவயதில் புட்டாலம்மை நோயால் பாதிக்கப்படுதல்
• முதுகுத் தண்டில் அடிபடுதல்

விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும் அயச்செந்தூரம்



நன்கு சுத்திசெய்த அயத்தூள் 250 கிராம், மான்செவிக்கள்ளிப் பால் 200 மி.லி உதியம் பட்டைச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
அயத்தூளை மான்செவிக்கள்ளிப்பாலில் போட்டு வெயிலில் வைக்க நீறும். நன்கு காய்ந்தபின் சுரண்டி கல்வத்தில் போட்டு, உதியம் பட்டை சாற்றினால் 12 மணிநேரம் அரைத்து 11-2 அடி சதுர குழியில் புடமிடவும். இப்படி 10 புடமிட மிகமென்மையான சிவந்த செந்தூரமாகும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம், தினமிருவேளை, தேனில், 1 மண்டலம்.
தீரும் நோய்கள்:
பாண்டு, சோகை, காமாலை, இரத்த குறைவு நீங்கும், உடல் இறுகும், விந்துஊறும் தாதுகட்டும், நரம்புகள் வலுப்படும்.

, பக்கவாதம் பஞ்ச சூத செந்தூரம்



வீரம், பூரம், லிங்கம், ரசம், ரசசெந்தூரம். வகைக்கு 35 கிராம், நெருஞ்சிச்சாறு செல்லத்தக்க அளவு. தாய்ப்பால் அல்லது வெள்ளாட்டின் பால் செல்லத்தக்க அளவு.
செய்முறை:
மேலே கூறப்பட்ட பாஷhணங்களை முறைப்படி சுத்தி செய்து, கல்வத்தில் இட்டு ஒன்றன்பின் ஒன்றாக போட்டு அரைத்து, நெருஞ்சில்சாறு விட்டு 12 மணிநேரம் சுருக்குக் கொடுத்து, எடுத்து, குழியம்மியில் இட்டு கொடிவேலிவேர் குடிநீரால் ஒரு வாரம் நன்கு அரைத்து உலர்த்தி பதனப்படுத்துக.
அளவு:
50 முதல் 100 மில்லிகிராம் வரை, காலை மாலை இருவேளை
துணை மருந்து:
தேன், நெய், மார்க்கண்டேய சூரணம்.
நோய்கள்:
கை, கால்கள் பிடிப்பு, பக்கவாதம், குத்தல், குடைச்சல், உடலில் ஒடி ஒடி குத்துகின்ற வாய்வு, நாக்குவாதம் முதலியன குணமாகும்.
பத்தியம்:
புளி, புகை, புணர்ச்சி நிக்கி, பாலன்னம் உட்கொள்ளவும்.
குறிப்பு:
மருந்து 5 நாட்கள், 5 நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடியும் மருந்து தரவேண்டும். நோய்க்கேற்ற துணை மருந்துகளில், அவரவர் அனுவத்திற்கேற்றபடி கொடுக்கலாம்.

விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை மன்மதலோக செந்தூரம்



சுத்திசெய்த அயத்தூள் 150 கிராம் சுத்திசெய்த செம்மண் பூராகம் வகைக்கு 150 கிராம்.
செய்முறை:
இவ்விரண்டையும் கல்வத்திலிட்டு 6 மணிநேரம் அரைத்து எடுத்து வில்லை செய்து, ஒட்டிலிட்டு மேலோடு மூடி சீலைமண் செய்து, 2 அடி சதுரபுடமிடவும். மறுபடியும் பூநாகம் சேர்த்து முன்போல் அரைத்து புடம். இவ்வாறு 16 தடவை புடமிட்டு 17ம் தடைவ பூநாகம் சேர்க்காமல் புளிப்பு மாதுளம்பழச்சாறு விட்டு 3 மணிநேரம் அரைத்து சிறு சிறு வில்லைகளாக செய்துலர்த்தி, முன்போல் புடமிட்டு எடுக்கவும்.
அளவு:
25 முதல் 50 மில்லிகிராம் வரை காலை மாலை இருவேளை ஒரு மண்டலம். புளி, புகை, புணர்ச்சி தள்ளி.
துணைமருந்து:
நெய், தேன், பாதாம் அல்வா, சிட்டுக்குருவிலேகியம்.
தீரும் நோய்கள்:
விந்து நீற்றுப்போதல், ஆண்மையின்மை இவைகளை நீக்கி உடலில் நல்ல இரத்தம் விருத்தியாகி நரம்புகள் முறுக்கேறி தேகம் வன்மை பெறும். ஆண்மை சக்தியை விருத்தி செய்து வாலிய சக்தியை உண்டாக்கும். இதை வருடத்தில் 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் வஜ்ஜிர உடம்காகும்.

இரத்த உற்பத்தி உண்டாகும். சுயமக்கினி செந்தூரம்



சுத்தி செய்த:
இரசம் 40 கிராம், மனோசிலை 20 கிராம், கந்தகம் 80 கிராம், காந்தம் 160 கிராம், அயத்தூள் 320 கிராம், குமரிச்சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
கந்தகத்தையும் இரசத்தையும் கல்வத்திலிட்டு நன்கு கறுப்பாகும் வரை அரைத்து பிறகு மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாக அரைத்துச் சேர்த்து, குமரிச்சாறுவிட்டு 6 மணி நேரம் நன்கு அரைத்து உலர்த்திப் பொடித்து வெண்கலத்தட்டில் பரப்பி கடும் வெயிலில் வைக்க பூத்துவிடும். ஆறியவின் கல்வத்திலிட்டு அரைத்துப் பயன்படுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.கிராம் வரை, தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
நெய், தேன், சீரகசூரணம், சீந்தில் சூரணம்.
தீரும் நோய்கள்:
வாத குன்மம், மகோதரம், மூலம், கிராணி, பேதி, காமாலை, பாண்டு, சோகை, இரத்தக் குறைவு நோய்கள் நீங்கி இரத்த உற்பத்தி உண்டாகும்

இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.



அக்கினி குமார செந்தூரம்
இரசம், மனோசிலை, வகைக்கு 40 கிராம், காந்தம் 160 கிராம், அயப்பொடி 320 கிராம், இலிங்கம், கல்நார், கல்மதம் வகைக்கு 10 கிராம், சோற்றுக் கற்றாழைச் சாறு செல்லத்தக்களவு.
செய்முறை:
இரசத்தையும் கந்தகத்தையும் கல்வத்திலிட்டு முறைப்படி, அரைத்துபின், மற்ற சரக்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து, சோற்றுக்கற்றாழைச் சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து உலர்த்திப் பொடித்து இரும்புக் கிண்ணத்திலிட்டு கடும் வெயிலில் வைக்க புகைத்து செந்தூரமாகும். அதைக் குப்பியில் அடைத்து நெற்புடமாக மண்டலம் வைத்து எடுத்து பயன்படுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை
துணைமருந்தும்: தீரும் நோய்கள்:
இஞ்சிச்சாற்றில் 10 நாட்களுக்குக் கொடுக்க வாதம், சுரம், எண்வகை குன்மம், சன்னிநோய்களும், வெள்ளுள்ளி, தைலத்தில் கொடுக்க சன்னி, கபநோய்களும், தேனில் கொடுக்க மகோதரம், உளமாந்தை, நீர்கோவை, கிராணி, மந்தாக்கினி, நீரழிவு நோய்களும், கரப்பான் சாற்றில் கொடுக்க காமாலை, சோகை, பாண்டு நோய்களும் நீங்கி உடலில் இரத்த தாதுக்கள் பெருக்கமடையும்.

வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.





மால்தேவி செந்தூரம்
அப்பளக்காரம் 150 கிராம், படிக்காரம் 150 கிராம், சுத்தி செய்த மால் தேவி என்ற தாளகம் 315 கிராம்.
செய்முறை:
முன் இரண்டு சரக்குகளையும் தூள் செய்து, ஒரு சட்டியிலிட்டு, அடுப்பின் மீது வைத்தெரிக்க உருகும். அச்சமயம் மேற்படிச் சேர்த்து நன்கு புரட்டிக் கொண்டிருக்க உருகிய உப்பு ஒரு பாகம் தாளத்தைப் பிடித்துக் கொள்வதுடன், தாளகமும் சிவந்து விடும். இதைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பதனப்படுத்தவும். துனித்திருக்கும் உப்பை நீக்கிவிடவும்.
அளவு:
50 முதல் 100 மி கிராம், தேனுடன்
தீரும் நோய்கள்:
வாதநோய், பிரமேகம், நீரடைப்பு, சூதகவாயு, கபநோய்கள்.

நரம்புத்தளர்ச்சி, , இருதயபலவீனம், வாதம்




அயவீர செந்தூரம்
சுத்தி செய்த அயத்தூள் 50 கிராம், வீரம் 25 கிராம்
செய்முறை:
இரு சரக்குகளையும் கல்வத்திலிட்டு நாவல் பட்டைச் சாறு, பொற்றிலைக்கரிப்பான் சாறு, மொந்தன் வாழைச்சாறு இவைகளை முறையே 200 மி.லி வீதம் ஒன்றன்பின் ஒன்றாகவிட்டு நன்கு அரைத்து வில்லை தட்டி காய்ந்த பின் அகலில் அடக்கி மேல் அகல் மூடி சீலை மண் செய்து உலர்ந்தபின் 11ல் 2 பாகம் முழ உயரத்திற்கு எருவடுக்கி குழிபுடமிட உயர்தர செந்தூரமாகும். இதைக்க கல்வத்திலிட்டு நன்கு அரைத்துப் பதனபடுத்தவும்.
அளவு:
100 முதல் 200 மி.லி கிராம் தினம் 2 வேளை 1 மண்டலம்.
துணைமருந்து:
தேன், இலேகியம், நெய், அமுக்குரா சூரணம்.
தீரும் நோய்கள்:
நரம்புத்தளர்ச்சி, தமரக நோய்கள், இருதயபலவீனம், வாதம், முதலியவைகளை நீக்கி உடலுக்கு வன்மைகளைத் தரும்.
பத்தியம்:
இச்சாமத்தியம் அவசியம் மேற்கொள்ள வேண்டும

மூட்டுவலிமருத்துவம்:




மருத்துவம்:
மூட்டுவலி மருத்துவத்தில் உள்மருந்தை தேர்வு செய்வது என்பது நோயாளியின் நாடி நடை, தேக வன்மை மற்றும் சரியான நோய்க்கனிப்பு போன்ற விஷயங்களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே முழுமையான தீர்வைக் கொடுக்க இயலும். ஆகவே வெளிப்பிரயோக மருந்துகளை மட்டுமே இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும். ஏனெனில் எனது அனுபவத்தில் நோயாளர்கள் வெளிப்பிரயோக மருந்தில்கூட முழுமையாக குணமடைந்ததும் உண்டு.
சரக்குகளும் செய்முறையும்:
கொடிவேலி, ஆதண்டை, மாவிலிங்கம், பொற்கொன்றை, வேம்பு, காற்றொட்டி, புங்கம் வேர்ப்பட்டை இவை வகைக்கு 3 பலம்(105 கிராம்) இடித்து, தூணிப்பதக்கு(ஆறுமரக்கால்) தண்ணீர் விட்டு, ஜந்தில் இரண்டாகக் காய்ச்சி, வடிக்கட்டிக்கொண்டு, ஆமணக்கு எண்ணெய், வேப்ப செய்தது), அதிமதுரம், பெருங்குரும்பை, குளவிந்த மஞசள், திரிபலா, சாதிக்காய், வசம்பு, அரத்தை, துருக, ஓமம், வெள்ளைப் பூண்டு, சேராங்கொடடை, (சுத்தி செய்தது), பெருங்காயம், கார்போக அரிசி, வளிச்சப்பிசின், திப்பிலி, சுக்கு.
இவை வகைக்கு ஒன்றரை பாகம் வராகனெடைத் (6.3 கிராம்) தூள் வீதம் போட்டு எரித்து, வடித்து, மூட்டுவலியுள்ள பகுதியில் நேய்த்து வர, எட்டு நாளில் வாதம் என்று சொல்லக்கூடிய எல்லா வியாதிகளும் தீரும். இது கைகண்டமுறை, அகஸ்தியராலும் சொல்லப்பட்டிருக்கிறது.
தெரிந்து கொள்வோம்:
1. தொண்டை வலியை உடன் குணப்படுத்தாவிடில் மூட்டுவாதம் வர வாய்ப்புண்டு.
2. மூட்டுவாத நோய் கண்டவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படும்.
3. கீல்வாத நோய் கண்டவர்கள் வலி இருந்தாலும் மூட்டுகளை அசைக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் மூட்டுகள் செயலிழக்க வாய்ப்புண்டு.
4. எலும்பு சிதைவு மூட்டு அழற்சி நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

பந்துக் கிண்ண மூட்டுகள்:
ஒர் எலும்பின் பந்து போன்ற உருண்டை முனை மற்றொன்றின் குழியில் பொருந்தி இருப்பது
(எ-டு): தோள், இடுப்பு, மூட்டுகள். இந்த இரு இடங்களில் உள்ள மூட்டுகளுக்கு பின்வரும் அசைவுகள் உள்ளன.
வளைதல், அசைதல், உடலின் மையத்திலிருந்து புறம்பே போய் அசைதல், உடலின் மையத்தை நோக்கி வருதல், திரும்புதல் அல்லது வட்டமிடுதல், வட்டமாகச் சுழலுதல்.
கீழ் மூட்டு:
இதனால் ஏற்படும் அசைவுகள் வளைத்தலும், நீளுதலும் மட்டுமே (எ-டு) மழங்கை, முழங்கால், விரல் மூட்டுகள்.
வழுக்கு மூட்டுகள்:
ஒன்றன் மேல் ஒன்றுள்ள எலும்புகள் வழுக்கி வருதல், ஒரளவு தாரளமாக அசைவுகள் ஏற்படும். எ-டு: மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.
முளை மூட்டு:
வட்டமிடுதல்(திரும்புதல்) என்பவை மட்டும் தான் இந்த மூட்டுகளில் (எ-டு) தலை திரும்பும் போது, அட்லஸ் எலும்பு, பிடர் அச்சின்மேல் சுழலுகிறது, கையைத் திரும்பம்போது, ஆர எலும்பு, முழங்கை எலும்பின்மேல் சுழலுகிறது.
மூட்டுவலியின் பிரிவுகளும், அறிகுறிகளும்:
மூட்டு வாதம், கீழ் வாதம், அடிபடுதலால் ஏற்படும் மூட்டழற்சி, மூட்டில் தொற்று, மூட்டு எலும்புச் சிதைவு அழற்சி.
மூட்டு வாதம்:
அறிகுறிகள்: பெரிய மூட்டுகளில் வீக்கம், வலியுடன் கூடிய காய்ச்சல்.
வெளிப்பாடுகள்: மூட்டுகளில் வீக்கம் மாறி மாறி வரும். மூட்டுவலி கடுமையாக இருக்கும். மூட்டில் நீர்; கோர்த்து இருக்கும். மூச்சுத் திணறல் இருப்பதாக முறையிடக் கூடும். சமீபத்தில் தொண்டைவலி கண்டிருக்கலாம்.
கீழ் வாதம்:
அறிகுறிகள்: கைகள், பாதங்களில் உள்ள சிறு மூட்டுகளில் வலி, வீக்கம்.
வெளிப்பாடுகள்: காய்ச்சல் அதிகம் இருக்காது. காலையில் வலி கடுமையாக இருக்கும். சிறு மூட்டுகள் அதிக அளவிலும் பெரிய மூட்டுகள் சிறிய அளவிலும் பாதிப்படையும்.
அடிபடுவதால் ஏற்படும் மூட்டழற்சி:
அறிகுறிகள்: கீழே விழுவதால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம்.
வெளிப்பாடுகள்: எலும்பு முறிவு, மற்ற காயங்கள் இருக்கலாம்.
மூட்டில் தொற்று:
அறிகுறிகள்: காய்ச்சல், மூட்டுகளில் வீக்கம், மூட்டுகளில் வலி பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க மறுத்தல், அசைத்தால் வலி அதிகமாக இருக்கும்.

வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல்




முடக்கற்றான் லேகியம்
முடக்கற்றான் சமூலம் உலர்ந்தது 250 கிராம், சுக்கு மிளகு, திப்பலி வகைக்கு 50 கிராம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், வகைக்கு 50 கிராம், கழற்சிக்காய் பருப்பு 50 கிராம், மூக்கரைச்சாரணை வேர் உலர்ந்தது 250 கிராம், அவித்து ஊற்றிய சுத்;தமான ஆமணக்கெண்ணை அரை லிட்டர், பனை வெல்லம் 2 கிலோ.
செய்முறை:
1 லிட்டர் நீரில் பனை வெல்லத்தைப் போட்டுக் காய்ச்சி கல், மண் நீக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகு பதமாகக் காய்ச்சி, ஆமணக்குக்கெண்ணெய் கூட்டி, மேற்படி சரக்குகளைச் சூரணித்து கலந்து கிண்டி கீழிறக்கி ஆற விடவும்.
அளவு: 10 கிராம், காலை, மாலை இருவேளை நீருடன்.
தீரும் நோய்கள்: வாய்வுத் தொல்லைகள், மலச்சிக்கல், கை, கால், உடல் எரிச்சல், முடக்கு, சொரி, வங்கு, வயிற்றுவலி, மேக சூலை, மார்புக்குத்து, மாரடைப்பு, நீர் குத்து, அண்ட வாதம்.

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு




அசுவகந்தி லேகியம்
உலர்ந்த நாட்டு அமுக்கிராக் கிழங்கு 500 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கோரைக் கிழங்கு, நன்னாரி, ஏலரிசி வகைக்கு 25 கிராம் பனைவெல்லம் 1500 கிராம், நெய் 150 கிராம்.
செய்முறை: 1 லிட்டர் நீரில் பனைவெல்லத்தைக் கரைத்துக் காய்ச்சி கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் பாகுபதமாகக் காய்ச்சி மேலே கூறப்பட்ட சரக்குகளின் சூரணத்தைப் போட்டு, கிளறி, நெய் விட்டு ஒன்று கலந்து ஆறியபின் பதனப்படுத்தவும்.
அளவு: 10 கிராம் தினம் 2 வேளை, பால் அல்லது நீருடன்.
தீரும் நோய்கள்: சுக்கிலக் குறைவு, பலவீனம், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, இரத்தக் கொதிப்பு, இரத்தக் குறைவு, இரத்த தோஷங்கள், இளைப்பு முதலிய நோய்கள் நீங்கி உடல் வலுவடையும்.
குறிப்பு: இந்த லேகியத்துடன் அயச் செந்தூரம் சேர்த்து சாப்பிடமிகு இரத்தவிருத்தியுண்டாகி, நரம்புகள் பலமடையும். இது ஒரு சிறந்த வலுவூட்டி டானிக் ஆகும

இருதயநோய்களுக்குசிறந்த மருந்தாகும்




குணஜோதி லேகியம்
சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, தாளிச பத்திரி, சீமை அத்திப் பழம், பறங்கிப்பட்டை, தான்றிக்காய் வகைக்கு 20 கிராம் ஏலரிசி, சாதிக்காய், சாதிப்பத்திரி, சீரகம், கொத்தமல்லி வகைக்கு 10 கிராம், அமுக்கிராக்கிழங்கு, நிலப்பனைக்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கோரைக் கிழங்கு, திராட்சைப்பழகு (விதை நீக்கியது) விளாம்பழம் வகைக்கு 50 கிராம், பேரிச்சம் பழம் 100 கிராம், பசும்பால் ஒன்றரை லிட்டர், நெய் கால் கிலோ, பனைவெல்லம் 1 கிலோ, தேன் 150 கிராம், அறுகுசமூலம் இடித்துப் பிழிந்த சாறு ஒன்றரை லிட்டர்.
செய்முறை: அறுகு சமூலச் சாற்றில் பனைவெல்லத்தைப் போட்டுக் கரைத்து கல்மண் இன்றி வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகாக்கி, மருந்துச் சரக்குகளைச் சூரணித்து, பாகிலே சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி, நெய்விட்டுக் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் தேன் விட்டுப் பிசைந்து ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் பாலுடன்.
தீரும் நோய்கள்: இருதயநோய்களுக்கு இந்த லேகியம் ஈடு இணையற்ற சிறந்த மருந்தாகும். மூளை முதலான இராஜ கருவிகளை வலுப்படுத்தும், இரத்திலுள்ள மாசுகளை நீக்கி இரத்த அழுத்தத்தை சீர்படுத்தவும், உடலுக்கு தேஜஸை உண்டாக்கும்.

பசியின்மை, இரத்தக்குறைவு, வயிற்றுப் பொருமல் பலவீனம்.




சிந்தாதி லேகியம்:
6 மாத காடி 8 லிட்டர், புளித்த மோர் 8 லிட்டர், கரிசலாங்கண்ணி சாறு 2 லிட்டர், இஞ்சிச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, நெருஞ்சிச்சாறு, சிறுகீரைச்சாறு, சிறுசெருப்படைச்சாறு, தென்னம்பூச்சாறு, கீழ்க்காய் நெல்லிக்காய் வகைக்கு 1 லிட்டர், ஆவின்பால் 3 லிட்டர், உலர்ந்த புளியம் இலை 1 கிலோ, சடாமஞ்சில், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவத்தல், ஒமம், கோஷ;டம், சீரகம், வால்மிளகு, ஏலம், கிராம்பு, தாளிசபத்திரி, இலவங்கப் பட்டை, ஆனைத்திப்பிலி வகைக்கு 20 கிராம். அன்னபேதி செந்தூரம் 100 கிராம். பனைவெல்லம் 2 கிலோ, நெய் பதினொன்றை கிலோ.
செய்முறை: மேலே குறிப்பிட்ட சாறு, திரவ, பால் இவைகளை ஒன்றாய்ச் சேர்த்து பனை வெல்லத்தைப் பொடித்துப் போட்டுக்காய்ச்சி, மண், கல் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி காய்ச்சி பாகாக்கி, மேலே குறிப்பிட்ட மற்ற சரக்குகளைச் சூரணித்து இத்துடன் சேர்த்து அன்னபேதி செந்தூரத்தையும் கலந்து துழாவி, லேகியபதமாக வருகையில் நெய்சேர்த்து பிசறி இறக்கி ஆறிய பின் பதனப்படுத்தவும்.
அளவு: 10கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள் நீருடன்.
தீரும் நோய்கள்: மகோதரம், பீலிகை, சோகை, பாண்டு, காமாலை, கிராணி, பசியின்மை, இரத்தக்குறைவு, வயிற்றுப் பொருமல் பலவீனம்

வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு




மது மேக லேகியம்:
சுத்தமான எள்ளுப் பிண்ணாக்கு, ஆவாரம் பட்டை வகைக்கு 30 கிராம், பருத்திப் பருப்பு 100 கிராம், வால்மிளகு, இலவங்கப்பட்டை 50 கிராம், மாச்சக்காய், சிறுநாகப்பூ 25 கிராம், பரங்கிப்பட்டை 50 கிராம், பசும்பால் 1 லிட்டர், நல்லெண்ணை 150 மி.லி பனைவெல்லம் 500 கிராம்.
செய்முறை: மேலே கூறப்பட்ட சரக்குகளைச் சூரணித்துக் கொண்டு பாலில் வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கரைத்துக் காய்ச்சி, கல், மண் இல்லாமல் வடிகட்டி, மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் காய்ச்சி முன் சூரணித்தை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, இறக்கி நல்லெண்ணை விட்டுப் பிசைந்து பத்திரப்படுத்தவும்.
அளவு: 10 கிராம், தினம் 2 வேளை, 40 நாட்கள்
துணை மருந்து: அப்பிரக செந்தூரம், தங்க செந்தூரம்.
தீரும் நோய்கள்: வெகு மூத்திரம், சர்க்கரை வியாதி, இந்திரிய இழப்பு, நீரிழிவு

நரம்புத்தளர்ச்சி


நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும். நரம்புத் தளர்ச்சியுண்டாவதற்கு 75 சதவீதம் மனந்தான் காரணமாயிருக்கின்றது. உடல் 25 சதவீதம் தான் இதில் சம்மந்தப்படுகின்றது. துன்பமயமான ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து, நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், மூளை நாளங்கள் கொதிப்படைந்து, உடலிலுள்ள எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதில்லை. ஆதலால், உடலில் தவிர்க்க முடியாக சோர்வு, தளர்ச்சி, நடுக்கம், அயர்வு ஏற்படுகின்றது. இந்த தாழ்ந்த இரத்த ஓட்டத்தால் ஈரலிலும் அது சம்பந்தப்பட்ட பாகங்களிலும் இயக்கச் சிக்கல் ஏற்படுகின்றது.
ஆண்களைவிட பெண்களே அதிகமாக நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகின்றார்கள். கணவன், குழந்தைகள், உறவினர்கள், நகைகள், துணிகள் இவைகளைப்பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களின் இயற்கையான குணமாயிருக்கின்ற படியினால் நரம்புத்தளர்ச்சி நோய் அவர்களுக்கு எளிதில் பற்றிக் கொள்கின்றது.
நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 20 வயது முதல் 50 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு. நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
ஞாபக மறதியும் ஒருவிதமான நரம்புத்தளர்ச்சி நோயின் அறிகுறியே. ஏடை குறைதலும், தூக்கமின்மை நோயும் இரத்த சோகை நோயும், எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வும், வறுமையைப் பற்றிய அச்சமும், சித்தபிரமையும் இந்நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்படுவது உண்டு.
நரம்புத்தளர்ச்சியினால் இருதயம் பாதிக்கப்பட்டு, வியர்வையும், எரிச்சலும், படபடப்பும், வேதனையும் உண்டாகும். ஆண்கள் ஆண்மையிழந்து பேடித்தன்மை ஏற்படுவதுமுண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சூதகக்கட்டும், சூதகம் அதிகமாய் வெளிப்படுவதும் கூட இந்நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாகத்தான்.
இந்நோய் உண்டாவதும், அது படிபடியாய் வளர்வதும், மிக்க விசித்திரமானது. ஆரம்ப காலத்தில், காலையில் படுக்கைவிட்;டு எழுந்திருக்கும்போதே, உடலும், உள்ளமும் ஒருவகை சோர்வு கொண்டிருக்கும். எக்காரியத்தில் ஈடுபடவும் வனம் இடந்தராது. வுpனாடிக்கொரு முறை கொட்டாவி வந்து கொண்டேயிருக்கம். எலும்பு மூட்டுகளில் ஒருவித இனந்தெரியாத குடைச்சல் ஏற்படும். அடிவயிறு லேசாக வலித்துப் போதிய மலக்கழிவு ஏற்படாது. மூளையின் செயல் மந்தித்து, தலைக்கனம் ஏற்படும். கை, கால் விரல்களின் நுனியில் நமச்சல் ஏற்படும். உள்ளங்காலும், உள்ளங்கைகளும் எரிவது போல் இருக்கும். நெஞ்சு லேசாக நடுங்குவது போன்றிருக்கும் எழுதும்போது, கைகளில் நடுக்கம் காணும். பேசும்போது வாய் குழறும், யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வரும். வேளா வேளைக்குச் சரியானபடி பசியெடுக்காது. உண்ட உணவுகளும் சரிவர சீரணமாகாது. ஓயாது தலைவலி ஏற்படும். உடலுறவு வேட்கை அளவுக்கு மீறி ஏற்படு;ம். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உடலில் இருக்காது. காற்றுக் குழாய்கள் சரிவர வேலை செய்யாமல் பெருமூச்சு வந்தபடியே இருக்கும். இந்த நரம்புத்தளர்ச்சி நோய் பல நோய்களின் தந்தையாக விளங்குகின்றது.
இந்நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க மனக் கோளாறுகளை நீக்கி அதற்கு மூல காரணமாக இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்த வேண்டும். எளிய தேகப்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும்.
சிகிச்சை
மன்மத லோக செந்தூரம், தாதுலிங்க செந்தூரம், அயவீர செந்தூரம், சந்திரோதய செந்தூரம், அசுவந்தி லேகியம் முதலிய உயர்ந்த மருந்துக்களை முறைப்படி கொடுத்து வர நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கி நல்ல குணமுண்டாகும்.

புற்றுநோய்


புற்றுநோய் மிகவும் பயங்காரமானது. தாங்க முடியாத வேதனையைத் தருவது. நோய் அனைத்திலும் இது மிகக்கொடியது. புற்றுநோய் ஆங்கிலத்தில் கான்ஸர் எனக் கூறுவது. இந்நோயை சித்த வைத்திய முறையில் புற்று பிளவை எனக் கூறப்படுகின்றது. இக்கொடிய புற்று நோய் உடலில் ஏதாவதொரு பாகத்தில் புது தசைவளர்ச்சியை உண்டுபண்ணி அதன் மூலம் உயிரை மிக விரைவில் மாய்ந்து விடக்கூடிய பயங்கர கொடிய நோய்.
இந்நோய் ஆண், பெண் இருபாலரையும் 30 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் பீடித்துத் தொல்லை தரும். வேறுபலபாகங்களில் குடியேறி வளர்வதால் அந்தந்த தசை பாகங்கள் இயற்கைக்கு மாறாக வளர்ந்து அதன் காரணமாக, விஷக்கிருமிகள் உண்டாகி, தசைநார்கள் அரித்துத் தின்னும் போது தான் புற்றுநோய் உண்டாகின்றது.
இந்நோயினை சித்த வைத்திய முறையில் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். இதற்கு 3 முறைகளை கையாளுதல் அவசியம். 1. நோயை மேலும் முற்றவிடாமல் அதன் உற்பத்திக் காரணங்களைக் கண்டுபிடிப்பது. 2. தகுந்த சிகிச்சை முறைகளை அளிப்பது. 3. இரண சிகிச்சை செய்யாமல் நேரடியாகவே சித்த வைத்தியம் செய்வது.
சுpகிச்சை
நுவபாஷhண பதங்கம், இராமபாண இடிமருந்து, இரசகந்தி மெழுகு, முப்பூரப்பதங்கம், கரிசாலை லேகியம், வேம்புச்சூரணம், சிவனார் வேம்பு சூரணம் முதலிய சிறந்த மருந்துகளில் தேர்ந்த ஒன்றை நோயின் வன்மைக்குத்தக்கபடி உள்ளுக்குக் கொடுத்தும், புங்க எண்ணை, பூரக்களிப்பு, சரமாரிக்குழி தைலம், புற்று இரணத் தைலம் முதலிய வெளிப்பிரயோக மருந்துக்களையும் உபயோகித்து சிறந்த முறையில் குணப்படுத்தலாம்.

இரத்த சோகை மருத்துவம்:


1. கருஞ்சீரகம்
2. சுக்கு
3. திப்பிலி
4. ஓமம்
5. மிளகு
6. இந்துப்பு
மேற்கண்டவற்றை சம அளவு எடுத்து, முறைப்படி சுத்தம் மற்றும் சுத்தி செய்து சூரணமாக்கி ஒரு கிராம் அளவு, வெல்லத்துடன் உட்கொள்ள வேண்டும்.
இதனுடன் தொடர் மருந்தாக:
1. குரிசாலைச் சமூலம் 100 கிராம்
2. நெல்லி வற்றல் 50 கிராம்
3. மூக்கிரட்டை இலை 50 கிராம்
4. கறிவேம்பு இலை 25 கிராம்
5. புதினா இலை 10 கிராம்
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து, ஒன்று சேர்த்து, நன்றாகக் கலந்து ஐந்து கிராம் அளவு தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட இரத்தித்தில் ஹீமோகுளோபின் அளவு மிகுதியாக இரத்த சோகை நிவர்த்தியாகும்.
இரத்தசோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொன்னாங் கண்ணிக்கீரை, மணத்தக்காளிக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், தேன் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருவணுவகத்தில் கட்டியும் தீர்வும்





முன்னுரை:
முனித இனத்தில் புதிய உயிர்கள் பால் இனச் சேர்க்கையின் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு புதிய உயிருக்கும் ஆண், பெண் எனும் இரண்டு பெற்றோர்கள் உண்டு. முட்டை எனப்படும் முட்டை செல்கள் பெண்ணின் உடலிலும், விந்தணு ஆணின் உடலிலும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு புதிய உயிரைத் தோற்றுவிப்பதற்கு ஆண், பெண் செல்கள் ஒன்று சேர வேண்டும்.
முட்டை செல்கள் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்சினைகளையும், கருவணுவகத்தில் ஏற்படும் கட்டிகயையும், அதற்கான தீர்வையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கருவணுவகத்தின் அமைப்பு:
கருவணுவகம் என்பவை பாதாம் விதைகளின் அளவையும் அமைப்பையும் கொண்டுள்ள இரு சுரப்பிகள், கருப்பையின் இரு புறங்களிலும் பக்கத்திற்கொன்றாகவும், அகன்ற பந்தகத்தின் பின் பரப்பில் ஃபெல்லோப்பியன் குழாய் முனைகளுக்குக் கீழேயும் அமைந்துள்ளன. சுpனைப்பந்தகத்தின் மூலம் இவை கருப்பையுடன் இணைந்துள்ளன. இவை நாலரை செ.மீ நீளமும், இரண்டேக அரை செ.மீ அகலமும் 1 செ.மீ கனமும் உடையவை. சுமார் 40 ஆயிரம் பெண் முட்டைகள் இதில் அடங்கியுள்ளன.


கருப்பை இறக்கம் மற்றும் பெரும்பாடு:
இவற்றிற்கான மருந்துகளாக, அயக்கருப்பு, மாசி;காய்ச் சூரணம், அத்திப்பட்டைச் சூரணம், அசோகப் பட்டைச் சூரணம், ஒதியம்பட்டைச் சூரணம், நாவல்பட்டைக் கசாயம் போன்றவைகளும் மற்றும் துவர்ப்புச் சுவையுள்ள மருந்துகளும் தரலாம்.




கருப்பை புரளல்:
கருப்பை புரண்டு விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வலி உண்டாகும், கருத்தரிக்காது, இதற்கு 'அஷ;ட சூரணம்' மிக உயர்வான மருந்தாகும்.
கர்ப்பப்பை வளர்ச்சியின்றி சிறுத்து விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வயிற்றுவலி உண்டாகும். கருத்தரிக்காது. இதற்கு உடல் வளர்ச்சிக்கும், இரத்த விருத்திக்கும் மருந்து கொடுப்பது அவசியம்.
இந்த வகையில், அயச்செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவழ பற்பம், சிலாசத்து பற்பம், திரிபலாதி சூரணம், திரிகடுகுச் சூரணம், அதிமதுரச் சூரணம் போன்றவைகளை மருந்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.





கருப்பைக்குழல் சதை அடைப்பு:
கருப்பைக் குழாயில் சதை அடைப்பு மற்றும் வீக்கம் உண்டாகி இருந்தால் சினையகத்தில் இருந்து கருமுட்டைகள் சரியானபடி கருப்பைக்கு வராமலும், ஆணின் உயிரணுக்கள் அதனைத் தொடாதவாறு இந்த அடைப்பு தடுக்கிறது. இதனைத் தகுந்த பரிசோதனை மூலமும் மற்றும் நாடிக்கணிப்பின் மூலமாகவும் அறிந்து, அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல குணம் கிடைக்கும்.
சினையக பலவீனம்:
சினையக பலவீனம் இரண்டு காரணங்களால் உண்டாகும்.
1. உடலுக்குத் தேவையான ஊட்டமின்மை
2. அமிலத்தன்மையால் மாதவிலக்கு சரியாகத் தோன்றாமல் இருப்பது.
உடல் பலவீனத்திற்கு:
திரிபலாதி சூரணம், கரிசாலைச் சூரணம். அன்னபேதி செந்தூரம். நெல்லிக்காய் இலேகியம், தேற்றான்கொட்டை இலேகியம், வெண்பூசணிக் கிருதம் போன்ற மருந்துகள் சிறந்த பயனைத்தரும்.
அமிலத்தன்மை கட்டுப்பட:
திரிகடுகுச் சூரணம், பவழபற்பம், சங்குபற்பம், ஆறுமுக செந்தூரம், மகா வல்லாதி இலேகியம் போன்றவற்றைத் தகுந்த மருத்துவக் காண்காணிப்பின் பேரில் தரலாம்.




கருப்பை வீக்கம்:
வெளி உபயோகமாக
1. வல்லாரை இலையை வைத்துக் கட்டலாம்.
2. பிண்டத் தைலம் பூசலாம்.
உள்ளுக்கு மருந்து திரிகடுகுச் சூரணம், ஆறுமுக செந்தூரம் போன்றவைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

கர்ப்பப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி:
கீழாநெல்லிச் சூரணம், அறுகம்புல் சூரணம், சிறுகண்பீளைச் சூரணம், வெள்ளரிவித்தச் சூரணம், சிலாசத்து பஸ்பம், வெடி அன்னபேதி செந்தூரம போன்ற, வெப்பத்தைத் தணிக்கக்கூடிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.


கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
பெண்குறி மற்றும் கருப்பையில் உண்டாகும் அரிப்பு, புண், கிர்த்தி இவைகளுக்கு கருடன் கிழங்குத் தைலம் மற்றும் கருடன் கிழங்குச் சூரணம் ஆகியவை சிறந்த பயன்தரும் மருந்துகளாகும்
கருடன் கிழங்குத் தைலம் செய்முறை:
• கருடன் கிழங்கு சூரணம் 100 கிராம்
• கருஞ்சீரகம் 25 கிராம்
• சுக்கு 25 கிராம்
• வாய்விளங்கம் 25 கிராம்
• மிளகு 25 கிராம்
• கார்போக அரிசி 25 கிராம்
• திப்பிலி 25 கிராம்
• சிறிய வெங்காயம் 25 கிராம்
• வாலுளுளை அரிசி 25 கிராம்
• விளக்கெண்ணெய் 25 கிராம்
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை சுத்தம் செய்து கல், மண் முதலியவைகளை நீக்கி, சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
சுpறிய வெங்காயத்தை அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள சூரணக் கலவையில் வெங்காயச் சாறு ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் இரும்புக் கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கலவையைப் போட்டு சிறு தீயில் எரித்து, நீர்ப் பசையில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: 1. தேக்கரண்டி அளவு, தினமும் 2 வேளைகள்.
புத்தியம்: உணவில் உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ளவும்.
கருடன் கிழங்குச் சூரணம் செய்முறை:
• கருடன் கிழங்கு வற்றல் 100 கிராம்
• வாலுளுவை அரிசி 25 கிராம்
• சுக்கு 25 கிராம்
• கருஞ்சீரகம் 25 கிராம்
• மிளகு 25 கிராம்
• வாய்விளங்கம் 25 கிராம்
• திப்பிலி 25 கிராம்
இவற்றை சுத்தம்செய்து நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: கால் முதல் அரை தேக்கரண்டி வரை.






மாதவிடாய்க் கோளாறுகள்




ரஜப்பிரவர்த்தினி:
1. முசாம்பரம்
2. பால் பெருங்காயம்
3. வெங்காரம் (பொரித்துப் பொடித்தது)- டங்கண பஸ்ம 10 கிராம்
4. அன்னபேதிச் செந்தூரம் காஸீஸபஸ்ம 10 கிராம்
இவற்றைக் கல்வத்திலிட்டுக் கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் எடுத்து 500 மில்லிகிராம் எடையுள்ள மாத்திரைகளாக ஆக்கவும்.
அளவும் அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு அல்லது மூன்று வேளைகள் வெந்நீர், கொள்ளுக் கஷhயம் அல்லது எள்ளுக் கஷhயத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்: சூதகக்கட்டு (ஆர்த்தவரோத ரஜோரோத), வலியுடனும், சிரமத்துடனும், சூதகம் வெளிப்படுதல் (கஷ;டார்த்தவ) மற்றும் பலவித மாதவிடாய்க் கோளாறுகள். கருப்பை வலிவூட்டி. சிறுநீர் மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்தைத் தூய்மை செய்வித்து மாதாந்திர ருதுப்போக்கையும் மாதாந்திர பூப்புச் சுழற்சியையும் ஒழுங்கு படுத்துகிறது. இந்நிலைகளில் இது அசோகாரிஷ;டம் மற்றும் அசோகாதி வடியுடன் தரப்படுகிறது. கொள்ளுக் கஷhயத்துடனும் தரப்படுவதுண்டு

தைராய்டு நோயின் அறிகுறிகள்:மருத்துவம்:




தைராய்டு மிகையான நோயின் அறிகுறிகள்:
• வீங்கிய தைராய்டு சுரப்பி (காய்டர்)
• துருத்திய கண்கள் (முண்டகக்கண், முண்டகம் தாமரை)
• துரிதமான இருதயத் துடிப்பு (டேகிகார்டியா)
• ஏடை குறைவு
• கிறுகிறுப்பு
• கைகள் நடுக்கம்
• மிகையான வியர்வை
தைராய்டின் மந்தமான நோயின் அறிகுறிகள்:
• மந்தமான வளர்சிதை மாற்றம்.
• தடைப்பட்ட வளர்ச்சியம் முதிர்ச்சியும்.
• மந்தமான மனநிலை
• சருமத்தின் சிலாகங்களின் வீக்கம் மற்றும் பல நோய்கள் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு சுரப்பி மந்தமாகப் பணி புரிந்தாலோ அல்லது சுரப்பி சுருங்கி விட்டாலோ அந்த நிலையை கிரிடினிஸம் (அறிவுச்சோர்வு, மடமை) என்கிறோம்.
மருத்துவம்:
மூலிகைகளும் பயன்படுத்தும் அளவும்:
1. மந்தாரப் பட்டை 100 கிராம்
2. வேங்கைப் பட்டை 100
3. மாவிலிங்கம் வேர் 50
4. கடுக்காய்த் தோல் 50
5. தான்றிக்காய்த் தோல் 50
6. நெல்லி வற்றல் 50
7. சுக்கு 50
8. மிளகு 50
9. திப்பிலி 50
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து பின்னர் சம அளவாய் ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து, ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும்.
மேற்கண்ட மூலிகைகளோடு மற்ற உறுப்புகளின் செயல்பாடு, ஹீமோகுளோபின் அளவு, ஜீரண மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உள்ளனவா எனக் கவனித்து, தேவை ஏற்பட்டால் அவற்றிற்குத் தகுந்த மூலிகைகளையும் சேர்த்துக் கொடுத்தால் முழுமையான குணம் பெறலாம்.
மேற்கண்ட மருந்தோடு முறையான உணவும், யோகாசனப் பயிற்சியும் செய்து வந்தால் விரைவான குணம் கிடைக்கும். இதற்கு நல்ல பலன் தருகிறது.

பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள்




கல்யாணக க்ருதம்:
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. தும்மட்டி இந்த்ரவாருணீ 12.500 கிராம்
2. கடுக்காய்(கொட்டை நீக்கியது) 12.500
3. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) 12.500
4. நெல்லிமுள்ளி 12.500
5. அரேணுகம் 12.500
6. தேவதாரு 12.500
7. மூசாம்பரம் 12.500
8. மூவிலை 12.500
9. கிரந்தி தகரம் 12.500
10. மஞ்சள் 12.500
11. மரமஞ்சள் 12.500
12. நன்னாரி 12.500
13. நன்னாரி (கருப்பு) 12.500
14. ஞாழல் பூ 12.500
15. நீல ஆம்பல கிழங்கு 12.500
16. ஏலக்காய் 12.500
17. மஞ்சட்டி 12.500
18. நாகதந்தி வேர் 12.500
19. மாதுளை ஓடு 12.500
20. சிறுநாகப்பூ 12.500
21. தாளீசபத்திரி 12.500
22. முள்ளுக்கத்திரி 12.500
23. முல்லைப்பூ 12.500
24. வாயுவிடங்கம் 12.500
25. ஓரிலை 12.500
26. கோஷ;டம் 12.500
27. ரத்த சந்தனம் 12.500
28. பதிமுகம் 12.500
29. பசுவின் நெய் 800
30. தண்ணீர் 3.500 லி
செய்முறை: இவைகளைக் கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம் பாகத்தில் வடிக்கட்டவும்.
அளவு: 5 முதல் 10 கிராம் வரை, ஒரு நாளைக்கு; 2-3 வேளைகள்.
தீரும் நோய்கள்: இருமல், இரத்த சோகை, இளைப்பு, நாட்பட்ட காய்ச்சல், மலேரியா போன்ற நச்சுக்காய்ச்சல், கால்கை வலி, ஒருவித குழந்தை நோய், பைத்திய நிலை, நச்சுக்கோளாறு அக்காலத்திய செயற்கை நச்சு, குதிகால்வாதம், அக்கி, மூத்திரக் கோளாறுகள், பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை, கருப்பை பிறப்புறுப்புப் கோளாறுகள் போன்ற பெண்ணோய்கள்.
அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு இதனை அசுவகந்தி லேகியம், பனஞ்சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பப்;பையும் பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத் தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு அமைதியைக் தருகிறது.

பெண்கள் வியாதிகளும், தீர்வுகளும்.


பெண்கள் வியாதி நிவாரணம்.


பெண்களுக்கு என்று சில நோய்கள் உள்ளன. அவைகள் தனக்கும் தனது கணவனுக்கும், தன குழந்தைக்கும் தீராத வியாதிகளை உறவாக்கு கின்றன. இவைகளை நிரந்தரமாக குணபடுத்துகிற மருந்துகள் இல்லை. ஆனால் சித்த மருத்துவத்தில் ஆயிரகணக்கான மருந்துகள் இருக்கின்றன. அவைகளில் ஒரு சிலவற்றை எளிதாக கிடைக்கின்ற பொருட்களை கொண்டு எந்த வித பக்க தீய விளைவுகள் இல்லாமல் குறைந்த செலவில் குணமாக்கி கொள்ளலாம்.


மாதவிடாய் ஒழுங்காக.
புதினா சாறு எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.
வல்லரையுடன் சமம் உத்தாமணி இலை சேர்த்து அரைத்து கழர்சிக் காய் அளவு நான்கு நாள் வெந் நீரில் கொள்ள சூதக சிக்கல் தீரும்.


மாத விடை வயிற்று வலி தீற.
அத்தி பலம் தேனில் ஊறவைத்து சாப்பிடவும்.


பெரும் பாடு தீர.
மாசி காயினை கருகாமல் வறுத்து பொடி செய்து ஒரு கிராம் தேனில் உண்டு வர பெரும் பாடு தீரும்.
ஆவாரம் பட்டையினை பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வரவும்.


வெள்ளப் படுதல் குணமாக.
இது போல் அத்தி, அசோக், மாமரப் பட்டை கசாயம் செய்து சாப்பிட்டு வரவம்.
அவுரி வேர், பெரு நெரின்சல் சேர்த்து அரைத்து மோரில் கலக்கி சாப்பிட்டு வரவும்.
கானா வாழை சமூலம், கீழா நெல்லியுடன் சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்கவும்.
தினமும் அன்னாசி பழம் சாப்பிட்டு வரலாம்.
சந்தனக் கட்டையினை சந்தன கல்லில் உரைத்து பாலில் கலக்கி அருந்தி வரலாம்.
தென்னம் பூவை மென்று தின்று வந்தால் வெள்ளை பெரும் பாடு தீரும்.


பெண்களுக்கு குடும்ப கட்டு பாடு.
உடல் உறவுக்கு பின் எள்ளு சாபிடவ்ம்.
அன்னாசி பலம், கருஞ் சீரகம், வெல்லம் சேர்ந்த காலையில் சாபிடவும்.
பெண்கள் மலடு நீங்க.
அசோகப் பட்டை, நாயுருவி வேர், அரசன் கொழுந்து சம அளவு அரைத்து பொடித்து தினம் காலை மாலை கால் கிராம் சாப்பிட்டு வர குழந்தை பேரு உண்டாகும்.
வேப்பம் பூ உடன் மிளகு சேர்த்து பொடியாக்கி சாப்பிட்டு வரவும்.


இடுப்பு வலி குணமாக.
வெள்ளைப் பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரவும்.
முலை காம்பு புண்ணு, வெடிப்பு குணமாக
ஆமணக்கு எண்ணையினை சீலையில் நனைத்து மார்பின் மேல் சுற்றி வைக்க குணமாகும்.
இது போன்ற மற்ற அனைத்து பெண்களின் வியாதிகள், மற்ற பிரசனைகளை தீர்க்க நமது மருத்துவ பிரிவில் நல்ல மருந்துகள் உள்ளன அவைகளை நேரில் வந்து பெற்று சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தோடு வாழுங்கள். அல்லது தொலை தூர பட காட்சி( video confrance) முலம் தொரர்பு கொண்டு மருந்து களை பெற்று கொள்ளலாம்.
எளிய சுலபமாக கிடைக்கும் மூ லகைகளை கொண்டு அனைத்து வியாதிகளையும் தீர்க்க நேர் முக வகுப்பில் மூலிகைகளை காட்டி அதை பயன் படுத்தும் முறையினை விளக்க மாக கற்று தரப்படும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கற்ப மருந்தும் சாப்பிடும் முறையும்.





உணவும் கற்ப மருந்துகளும்.


கடுக்காய் கற்பம்.
கடுக்காயினை அமுரியில் பொடி செய்து கலந்து இருபது நாள் வெரு கடி அளவு உண்டு வரவும். பின் கள்ளியின் காயினை குமரியுடன் சமனாக கூட்டி பொடி பண்ணி அமுரியில் கலன்து மேற்ப்படி அளவாக இருபது நாள் உண்டு வரவும்.


மிளகு கற்பம்.
மிளகுடன் அமுரி குட்டி உண்டு வரவும்.நெய்யை வார்த்து அதில் வெள்ளம் போட்டு கூட மிளகு பொடி அதிகமாகே போட்டு நீர் வார்த்து வறுத்துக் கொள்ளவும். இடஹியும் உண்டு வரவும். இத எலா சித்தர்களும் செய்வார்கள்



பின் கரிசாலை
ஒரு மண்டலம் உண்டு வரவும். இதனால் உடல் கறுக்கும்.
பொற்றிலை, வல்லாரை, அவுரி ஆகியவற்றை சமனாக கூட்டி பாக்கு அளவு பாளி கலந்து ஒரு மண்டலம் உண்டு வரவும். இதனால் ஆண்மையும் ஒரு பெரும் சேனையின் பலமும், மன்மதன் போல் அழகும் வாய்க்கும்.
கடுக்காய் கற்பம் உண்ணும் போது மேலும்


மூதண்ட கஷாயம் உண்டு வரவும்.
அருகம் வேர் ஒரு பிடியும் மிளகு இருபத்து ஐந்தும்ஒரு படி தண்ணீர் வார்த்து எட்டில் ஒன்றாய் காயிசி அதில் ஆவின் வெண்ணை ஒரு பாக்களவு போட்டு மாலை வேளையில் மேற்படி கற்பம் உண்ணுமளவு உண்டு வரவும்.


பத்திய உணவுகள்.
மூலம் பார்த்து கர்ப்பம் உண்ணுகையில் கூட்ட வேண்டிய நல்ல பத்தியமாவன; பாலாகும் நெய்யாகும், பழங்களில் பெரும் பாலானவைகளாகும். மிளகும் தேனுமாகும், வெல்லம் கன்சா வாகும், பயிறாகும், பொன்னாங்கண்ணி கீரை, சிறு கீரையாகும், தூதுவளை இலை காயாகும். இம்முறையால் கர்ப்பம் உண்டு சுகம் சேரும்படி செயவும்.
இவற்றோடு மேலும் கரு வேம்பு, கிராம்பு, சாதிக் காய், கத்தூரி ஆகியவை களும் கூடப் போட்டு உண்டு வரவும். மனம் கூட்டுதற்கு சீரகம் போடு, மஞ்சள் போடு. பசு நெய் சேர்க்கவும்


தள்ள வேண்டியவைகள்.
கற்பம் கொள்ளும் பொது கைகொள்ள வேண்டிய கட்டுப் பாட்டு முறையி னைக் கேள். உப்பு, புளி, எண்ணெய், சுண்ணம் புலால் வகைகள். மோர் முதலியன. கடுகு, உள்ளி, காயம்,பெண் போகம் முதலியன. உறக்கமும் சோம்பலும் ஆகா. பலவற்றில் கவனம் செல்வதை நீக்கிவிட்டு மூலம் பாரே.


தலை முழுக மருந்து.
நெய் வார்த்து தேய்த்துக் கொண்டு சிறுபயிர் அரைப்பாக பண்ணி தேய்த்து தலை முழுகி வரவும். கடுக்காய், நெல்லிக்காய் மிளகு மஞ்சள், வேப்பன் வித்து இவைகளை பொடி பண்ணி அமுரியில் கலந்து மாதம் ஒரு முறை முழுகி வரவும். இதனால் கபால வாய்வு நீங்கி கபாலம் கெட்டிப்படும். கண் புகைசல் நீங்கும் உடல் இறுகும்.


நல்லெண்ணெய் தொடக் கூடாது. உபயோகித்தால் உடலெல்லாம் வெடிப்புண்டாகி விரிந்து விடும்.

ஜனாப் கரீம் பாய் அவர்கள் எழுதிய புத்தகம்

https://docs.google.com/file/d/0B4TsAZnhl9y1ekg0dXZLMWVYWGM/edit?usp=sharing

பிரபஞ்சமும் தாவரங்களும்

முக்கிய மருந்து செய்முறை

















மருந்தை பற்றி திருமூலனார்

சசிவர்ண செந்தூரம் செய்முறை














சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு?


தேவையற்ற பதற்றமும் அறிய வேண்டிய உண்மைகளும்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.

மருத்துவர் யார்?

‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது’ என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை’ என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.

மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட.

வேர், மூலிகை

அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்’ என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.

“வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே”- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கனிம உருமாற்றம்

சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம – ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.

பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.

உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி

கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.

அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).

வியந்த உலகம்

மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.

இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.

தேவையற்ற குழப்பம்

இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.

எத்தகைய மாற்றம் தேவை?

அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.

ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.

நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

4 தொப்பை (சள்ளையை) கரைக்கும் மூலிகை வைத்தியம்




அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்துஇ பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவுஇ நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
2. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும்.
3. ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டுவ‌ர‌உட‌ல் எடை குறையும்.
4. தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.
5. நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.
6. பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌கொழுப்பு குறையும்.
7. காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

3. நோய் : ஆஸ்துமா

காரணங்கள் : குளிர்ந்த நீர், சுகாதாரமின்மை,

அறிகுறிகள் : இருமல், தும்மல், சளி, மூக்கில் நீர் வடிதல், மூச்சுத்திணறல், நெஞ்சில் சளி, சளி கட்டியாக இரத்தத்துடன் வருதல், மாலையில் காய்ச்சல், உடம்பு இளைத்தல்

மருத்துவம் :
திரி கடுகு சூரணம்
துளசி மனப்பாகு
ஆடாதொடை சூரணம்
தூதுவலை லேகியம்
சிவனார் அமிர்தம்
வெள்ளருக்கு குளிகை

2. நோய் : சளி, இருமல்

காரணங்கள் :
– குளிர்ந்த தண்ணீர் குடித்தல்.
– குடிநீர் மாறுபடுதல்.
– இரசாயன பொருட்கள் சுவாசித்தல்.
– நுரையீரல் குழாய் சிறிதாக இருத்தல்.
– உள் நாக்கு வளர்ச்சி

அறிகுறிகள் : இருமல், தும்மல், தலைவலி, மூக்கில் நீர் வடிதல்

மருத்துவம் :
– சந்திர கலா லேபம்
– துளசி மனப்பாகு
– ஆடாதொடை சூரணம்
– கற்பூராதி தைலம்
– திரி கடுகு சூரணம்
– தூதுவலை லேகியம்

மருந்து செய்முறை :

துளசி மனப்பாகு

துளசிச்சாறு – 1 லிட்டர்
பனைவெல்லம் – 1 கிலோ
சீரகம் – 200 கிராம்
இஞ்சி – ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை

தூதுவலை லேகியம் :

தேவையான பொருட்கள் :

தூதுவலை சமூலம் (தலை முதல் கால் வரை) – டி கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.