20160301

தூக்கமின்மை குறைய





பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட‌ தூக்கமின்மை குறையும்.

ஆரைக்கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

மணலிக்கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு நேரத்தில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.

ஜாதிக்காய் பொடியுடன் ஒரு மேஜைக் கரண்டியளவு நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால் தூக்கமின்மை குறையும்.

கொல்லங்கோவைச் செடியினை படுக்கை அறையில் கட்டித் தொங்கவிட்டால் தூக்கமின்மை குறையும்.

சொறி சிரங்குக்கு மேல்பூச்சு





"நோயது சிரங்கு சொறி கரப்பான் ஏது
நுவலவொணாது ஆறாபுண்புரைகள் ஏது
நோயேது இன்னமும் ஒரு சேதி கேளு
நுணுக்கமாம் தேங்காயை கருகச்சுட்டு
கலங்காமல் அதில் பாதி மிளகும் சேர்த்து
நோக்கமாய் அரைத்துஅதை வழித்துக் கொண்டு
நோயேது மேல் எங்கும் மூனால் பூசு பூசே
நேர்மையுடன் சாயரட்சை வெந்நீர் வாரே"

- போகர் வைத்தியம் 700

தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

தலை முடி வளர...






"கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".

- அகத்தியர் குணபாடம் -

கையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து அதில் நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோதிகருக்கும் இளைஞர் போல முடி வளருமாம் என்கிறார் அகத்தியர்.

சிறுநீரகக் கல் கரைய மருந்து...






"ஏலரிசியும் தேங்காய்ப்பூவும் நெரிஞ்சிவேற் மாவி
லங்கம் வேற் சிறு பூனை வேற்றிவை மூணும்
அரைத்துக் தண்ணி விட்டு சிறந்து காச்சி
இருவேளை ஆறுநாட் கொடப்பா கல்லுவீழும்".

- அகத்தியர் நயன விதி -

ஏலரிசி - 25 கிராம்
தேங்காய்ப்பூ - 25 கிராம்
நெரிஞ்சி வேர் - 25 கிராம்
மாவிலங்கம் வேர் - 25 கிராம்
சிறு பூனை வேர் - 25 கிராம்

இவை அனைத்தையும் எடுத்து ஒரு புதுப் பானையில் போட்டு பத்தில் ஒருபங்காகக் காய்ச்சி அதாவது ஒரு லீட்டர் தண்ணீர் விட்டு நூறு மில்லி லீட்டராகக் காச்சி தினமும் காலை மாலை என இரு வேளையாக ஆறுநாள் குடிக்கக் கொடுத்தால் சிறுநீர் கழியும் பொது கல்லானது சிறுநீருடன் வெளியில் வந்து விடுமாம்.

இந்த மருந்து குடிக்க எந்தப் பத்தியமும் சொல்லப் படவில்லை.

முகப்பரு குறைய




சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை தடவினால் முகப்பரு குறையும்.

வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

ஆஸ்துமா ஆஸ்துமா:




இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரண மாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அறிகுறிகள்:
மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.
காரணங்கள்:
தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.
மூலிகைகள்:
வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவெளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

தோல் நோய்கள்




* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது..

பிரசவ வலி


பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்

பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!

* பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

* கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

* கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

* சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

* ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

* ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. மேலும் வேறு என்ன அறிகுறிகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது




அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும். முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர். நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் அவசரத் தன்மை கொண்டவை. குறிப்பாக மலம் ஒரு இருண்ட நிறத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அல்சரை குணப்படுத்தும் சில விதிமுறைகளை பார்ப்போம்.....


1. சிவப்பு முட்டைகோஸை சாறெடுத்து அருந்தலாம் அல்லது அப்படியே உண்ணலாம்.

2. தொடர்ந்தோ அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டாலோ, அது அல்சரின் முதல் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே இந்த நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

3. ஒருவேளை மருந்துகள் சாப்பிட்டும், நிலைமை மோசமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளில் ஏதாவது ஒன்றை பரிசோதிக்க வேண்டும். - உயர் இரையக தொடர் (upper gastrointestinal (G.I) series): அல்சர் உள்ளதா என்பதை அறிய பேரியம் என்ற பானத்தை குடித்துவிட்டு x-கதிர்களை எடுக்க வேண்டும். - எண்டோஸ்கோப்பி (endoscopy): உணர்வற்ற நிலையில் இருக்கும் போது, மருத்துவர் உங்கள் வாய் வழியாக மெல்லிய குழாய் ஒன்றை செலுத்துவார். அக்குழாய் தொண்டை மற்றும் உணவுக்குழாய் மூலம் வயிற்றை சென்றடையும். அந்த குழாயின் முடிவில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமரா மூலம் மருத்துவர் செரிமான பாதையை பார்த்து, அங்குள்ள ஒரு திசு மாதிரியை ஆய்வு செய்வார். - ஆன்டிபாடிக்களுக்கான ரத்தப் பரிசோதனையின் மூலம் எச்.பைலோரி (h.phylori) பாக்டீரியா உள்ளனவா என்பதை அறியலாம். - எச்.பைலோரி பாக்டீரியா இருக்கிறதா என்று அறிய மல பரிசோதனை செய்ய வேண்டும். - யூரியா என்ற பொருளை கரைத்து குடித்த பின், உங்கள் மூச்சை சரி பார்க்கும் மூச்சுப் பரிசோதனையை செய்ய வேண்டும்.

4. அல்சர் நோய் உள்ளதை உறுதி செய்த பின் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்சரை சரி செய்யலாம்.

5. புத்தம் புதிய பழ வகைகள், காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அல்சர் குணமாவது மட்டுமல்லாமல், அதனை வராமலே தடுக்கலாம்.

6. ஃப்ளேவோனாய்டுகள் கொண்ட உணவு மற்றும் சாறு வகைகளை சாப்பிட வேண்டும். ஆப்பிள்கள், செலரி, கிரேன் பெர்ரீஸ், பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றிலும், சில வகையான தேநீர் வகையிலும், இந்த ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன.

7. காரசாரமான உணவை உண்ட பின் அல்சர் வலி அதிகரித்தால், அவற்றை நீக்கவும். காரசாரமான உணவுகளை உண்ணுவதால் அல்சர் வருவதில்லை என்று மருத்துவர்கள் இப்பொழுது கூறினாலும், சில ஆய்வுகள், இது போல் உணவு உண்ட பின் வலியின் அறிகுறி அதிகமாவதாக கூறுகிறது.

8. காபியை முழுமையாகவோ தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கார்போனேட் பானங்கள் மற்றும் காப்ஃபைன் நீக்கப்பட்ட பானங்களையும் நீக்க வேண்டும். இந்த பானங்கள் அனைத்தும் வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகரிக்கச் செய்து புண்களின் அறிகுறிகளை மிகவும் மோசமாக்கிவிடும்.

9. அல்சர் பூரணமாக குணமாகும் வரை மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அனைத்து சிகிச்சைகளும் முடிந்த பிறகு மிதமான மதுவை அருந்தலாம். ஆனால் மது அருந்தும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

10. அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அல்சரின் அறிகுறிகளை கட்டுப்படுத்த தன்னிச்சை அமில முறிவுகளை பயன்படுத்தலாம்.

மருத்துவ பயன் நிறைந்த இஞ்சி





உணவுகளில் சிலர் இஞ்சி உபயோகிப்பதே இல்லை ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் பயன் பற்றி தெரியாது இருக்கலாம். இஞ்சியின் பயன் பற்றி பாட்டிகளை கேட்டால் அதன் மருத்துவ குணம் பற்றி சொல்லுவார்கள்.



இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

வாழைமரத்தின் மருத்துவகுணங்கள்




வாழைமரத்தின் மருத்துவகுணங்கள் {The medicinal properties of banana leaf}

வாழைமரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அதிலும் இலையின் பங்கு மகத்தானது. வாழையிலையில் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெறும். வாழையின் மற்றப் பகுதிகள் அனைத்தும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பழம், வாழைப்பூ ஆகியவற்றை உடலின் உட்புறம் மருந்தாக பயன்படுத்திறோம். உடலின் வெளிப்புறத்தில் மருந்தாக பயன்படுவது இந்த வாழை இலை.



தீக்காயம் குணமாக:

வாழை இலை சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் தீக்காயங்கள் உட்பட குணமாகப் பயன்படுகிறது.

தீக்காயம், வெந்நீர்பட்டு ஏற்பட்ட காயம், கொதித்த சூடான எண்ணைய் பட்ட காயம் போன்றவற்றிற்கு வாழையின் குருத்து இலையை எடுத்து காயத்தின் மீது சுற்றி குருத்து இலையை கட்டாக போடலாம்.

மேலும் தீக்காயங்கள், சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களை வாழையிலையில் தேன் தடவி படுக்க வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு சில மணிநேரம் வாழையிலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவாக தீக்காயங்களிலிருந்து குணம்பெறலாம்.

வாழை வேரின் பயன்:
(Use of banana roots:)
குடற்புழுக்கள், நீரிழிவு, அமில நோய், தொழுநோய், இரத்த சோகை போன்ற நோய்களை வாழையின் வேர் குணமாக்குகிறது. இதற்கு வாழையின் வேரை எடுத்து நெருப்பில் சுட்டு வரும் சாம்பலை தேனுடன் குழைத்து சாப்பிட மேற்கண்ட நோய்கள் குணமாகும்.


வாழைப்பழத்தின் பயன்:
(Use of banana fruit)
நேந்திரம் வாழைப்பழத்துடன் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து பழத்துடன் குழைத்து சாப்பிட்டு வர கடுமையான இருமல் மட்டுப்படும்.

மன அழுத்தத்தைப் போக்க:
(To get rid of stress )
மன அழுத்தத்தைப் போக்க வாழையிலையில் ஐஸ் கட்டிகள் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

குழந்தைகளின் அரிப்பு நோயைக் குணப்படுத்த:
(The erosion of curing children)
குழந்தைகளுக்கு டயாஃபர் போன்றவை அணிவதால் ஏற்படும் அரிப்புகளைப் போக்கவும், கொசுக்கடியிலிருந்து காக்கவும் வாழை இலையை முக்கிய மூலப்பொருளாக்க் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்கள் உதவும். இவற்றை வீட்டிலும் தயாரிக்கலாம். வாலையிலையுடன், ஆலிவ் எண்ணை, தேன்மெழுகு இவற்றைக் கலந்து கீரிம்போல செய்து பயன்படுத்தலாம்.

அழகுப் பொருட்களில் வாழை:
(Banana in the use of cosmetic products)
வாழை இலையில் கிருமி நாசினி இருப்பதால் இவை, விஷ ஜந்துக்கள் கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள் ஆகியவற்றிற்கு ஏற்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. அழகுப் பொருட்களிப் பயன்படுத்தப்படும் Allantoin என்னும் பொருள் வாழையிலிருந்தே எடுக்கப்படுகிறது.

தோல்நோய் நீங்க:
(To remove the skin disease:)
தோலில் ஏற்படும் வெடிப்புகள் போன்ற தோல் பிரச்னைகள், பொடுகுத் தொல்லை, சிரங்கு, சொறி ஆகியவற்றிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்ய:
(To correct abdominal problems)
அஜீரணக் கோளாறுகளை வாழைப்பழம் சரிசெய்கிறது.
தேனுடன் வாழைப்பழம் கலந்து இருவேளை சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறுகள் நீங்கும்.

மூலநோய் குணமாக:
(To cure piles )
அரைக்கப் தயிருடன், ஒரு டம்ளர் இளநீர், ஒரு டீஸ்பூன் தேன், இவற்றுடன் வாழைப்பழத்தையும் பிசைந்து இருவேளை சாப்பிட்டு வர மூல நோய் மற்றும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.

ஆஸ்துமாவுக்கு குணம் காண




ஆஸ்துமா என்ற காச நோய்க்கு, வெள்ளெருக்கம் பூவிலுள்ள மூடு இதழ்களை விலக்கி, உள்ளே தேர் போன்ற நரம்பு ஒன்றை மட்டும் கிள்ளி எடுத்து, ஒரு நரம்பும் ஒரு கிராம்பும் ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட வேண்டும். தினமும் காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வர 30 நாட்களில் குணம் காணலாம்.

மருந்தில்லா மருத்துவம்




1.மார்புச் சளி
.வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

2.சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

3.இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

4.சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

5.டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

6.வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

7.வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

8.நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

9.தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

10.தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

11.தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

12.வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய்
நாற்றம் போகும்.

13.உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

14.அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

15.குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

16.வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

17.வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

18.மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

19.சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

20.பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

21.மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

22.சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

23.தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

24.மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

25.தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

26.மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

27.வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்..

வெற்றிலையின் மருத்துவ குணம்



மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை






காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல ளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்





வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.

சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

தேனுடன் பால் அருந்துதல் ஆண் விந்து உற்பத்தியை அதிகரிக்கிறது.




அண்மைக்கால இணையதள ஆய்வுஒன்றின்படி 18 தொடக்கம் 50 வயது வரையான ஆண்களில் 10% சதவீதமானோர் குறைவான விந்துஉற்பத்தி அளவினால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். விந்து உற்பத்திஅளவினை அதிகரிக்க கூடிய பல்வேறுபட்ட வீட்டு மருத்துவமுறைகள்காணப்பட்டலும், பால் அருந்துதல்மிகவும் இலகுவான ஒன்றாககாணப்படுகிறது. நிச்சயமாக தேனுடன்பால் அருதுதல் விந்து உற்பத்திஅளவினை வெகுவாக அதிகரிக்கும்ஒரு இலகுவான விடயமாகும்.

தேனுடன் பால் விந்து உற்பத்திஅளவினை அதிகரிக்க.

முக்கிய பிரச்சினைகளுக்கும் மலட்டுதன்மைக்கும் சிறந்த மருத்துவமாகதேன் என்கின்ற அமுதினைஆயுர்வேதம் நமக்கு சொல்லி தந்திருக்கிறது. ஒருமுறை அருந்த தக்கஒரு கப் சூடான பாலில் தேன் கலந்துஅருந்துவதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை 0 இலிருந்து 60 மில்லியன் இற்கு மேலாகஅதிகரிப்பதாக நம்பப் படுகிறது. விந்தணு உற்பத்தியை இயற்கை முறையில் அதிகரிக்கஉதவும் அன்றாட வாழ்வின் ஒரு சிறந்த மூலிகையாக பால் விளங்குகின்றது.

ஆண்களில் பாலியல் நொதியம்களை உண்டு பண்ணுவதில் வைட்டமின் A முக்கிய இடம்வகிக்கிறது. வைட்டமின் A உடல் தீங்குகளினால் உடல் கலங்களுக்கு ஏற்படுகின்றபாதிப்புகளை தடுக்கின்ற antioxidant தன்மைகளை கொண்டிருகிறது. சுக்கில குழாய்களைபரிபாலிப்பதிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது. வைடமின் A பாலில் நிறைந்துகாணப்படுவதால் ஆரோகியமான தரமான விந்தணுக்களை பெற்றுக்கொள்ள அடிக்கடிபால் அருந்துதல் ஒரு முக்கிய விடமாகும்.

ஆஸ்துமா, நீரிழிவு நோயை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை!






மணத்தக்காளி கீரை வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கொழுப்பை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும்.

மணத்தக்காளி கீரை சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.

மணத்தக்காளிக் கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வந்தால் நெஞ்சில் கட்டியுள்ள சளி அகற்றி வாத ரோகங்களை நீக்கும்.

மணத்தக்காளி சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல்.

இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும். ஆஸ்துமா, நீரிழிவு முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது.

மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன்படுத்தலாம்.

மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.

மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளி கீரை உடன் பாதியளவு பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.


மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வேகவைத்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு கீரையை சமைத்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும்.

மணத்தக்காளி இலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும்.

கொழுப்பைக் குறைத்து இதய நோய்களை குணமாக்கும் வெங்காயத்தாள்!





வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.

இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.

இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.


வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.

இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.

மேலு, வெங்காயத்தாள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது.

மேலும் இதில் உள்ள அமிலமானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி!


மார்ச் 4 – மஞ்சள் காமாலை, கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் கீழாநெல்லி செடி.

தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும். கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பசுவின் பாலை காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து, பின்பு நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.

கீழாநெல்லி 4 அல்லது 5 செடி, சீரகம், ஏலக்காய், திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லிக்காய் 30 கிராம், 4 மிளகுடன் இடித்து 2 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் உடல் சூடு, காய்சல், தேக எரிச்சல் தீரும். இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் குளித்தால் சொறி சிரங்கு குணமாகும்.

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி குழித்தால் பார்வை கோளாறு தீரும்.






காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும்.

சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும்.

செலரிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும்.

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்.

நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நொச்சி இலைகளை நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குணமாகும்.

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.

பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளையும் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் குணமாகும்.





பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா!


மே 8 – நம் முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம் புதினா.

மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.

புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா என 40 வகை புதினாக்கள் இருக்கின்றன. இதில் ஏ, பி, சி, வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு, நார், புரதம் என்று பல்வேறு சத்துகளும் நிரம்பி உள்ளன.

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. புதினாவில் உள்ள மருத்துவசக்தி அபாரமானது.

பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம்.

புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றுப்போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது.

இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.

மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமானம் ஆவதில் பிரச்சனை போன்றவை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த பாதிப்புகள் நீங்கி விடும்.

3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச்சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும்.

புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், முட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

மூல நோயை குணமாக்கும் பசலைக் கீரை!

மே 16 – பசலைக் கீரை கீரை வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது. வைட்டமின் ஏ, சி மற்றும் புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை சத்துக்கள் உள்ளன.

மூல நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பசலைக் கீரை மிகவும் நல்லது. மூல நோய் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்சனைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும். வாய்ப்புண்களை ஆற்றும். கருணைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பசலை சேர்த்து சமைத்து, சாப்பிட்டுவர ஆரம்பக்கட்ட மூல நோயைக் குணப்படுத்தும்.

சளி இருமல் பிரச்சனை மற்றும் வழுப்பு நோய் இருப்பவர்கள் மழைக்காலத்தில் இந்தக் கீரையைத் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த கீரையில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், சளி இருமல் பிரச்சனை உள்ளவர்களை வெகுவாக இது பாதிகும்.

ஆண்மை குறைபாட்டை நீக்கும் தொட்டாற்சுருங்கி!




ஜூலை 1 – காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

தோல்வியாதிகள், ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும்.

தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உளவாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும்.

அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற்சுருங்கி பெண் வசியம் செய்யும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். இதன் இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள்




கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல்நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும்நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள்தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம்பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடிவளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்துமுகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவுஏற்படும்.


* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம்கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.


* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்குதடைப்படும்.


* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில்ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.


கஸ்தூரிமஞ்சள் 50 கிராம்
பூவரசன்வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன்வேர் 25 கிராம்
சிறுநாகப்பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்


இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியைஎடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியைநன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும்.கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும்.அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இருவேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.


* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள்உடையும்.


* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும்,கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.


* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லதுசிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.




* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோகல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப்பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராது.

மஞ்சளின் மருத்துவ பலன்கள்








நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும், மஞ்சளின் மருத்துவ குணங்கள் நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம். மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது,


வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள் தான். சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் துளை, வேப்பங் கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால், வயிற்றில் பூச்சிகள் இருக்காது.


மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் துாள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலுக்கு பாலை கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் துாள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் துாங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் துளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும்,

இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் தான்.

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால் அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி முறியடித்து விடும். மஞ்சள் துாள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய் கூட அண்டாது.

நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் துாளை சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ், வடை, அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும்.


விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.


மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவு தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும் போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம் பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.

மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும்.


அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும்,

மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்.

வில்வம்.





வில்வத்தின் மருத்துவப் பயன்கள் -: வேர் நோய்நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறை களையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமை களில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.
இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.
பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.
பாண்டு சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை - கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.
வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
புற்றுநோய்தீர - நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும்.குடல் திடமடையும்.
இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக் கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் ஸ்நானம் செய்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல் உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.
வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.
வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.
வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத் தில் நிறம் மாறி மறைந்து விடும்.
வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத் திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரைமட்டும் அருந்தி னால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மற்றும் பாண்டு வியாதி பறந்தோடும்.
வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடியீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.
வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாக்க் கொதிக்க வைத்து பசும்பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கியும். ஆண்மையை அதிகரிக்கும்.
வில்வ இலைகளைக் கொண்டு வந்து அரைத்து கோலி அளவு காலையில் வெறும் வயிற்றில் நீரில் கலக்கிக் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் சென்ற பின் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். நாளடைவில் மாத ருது காலம் தவராமலும் அதுவால் ஏற்படும் வயிற்று வலியும் படிப்படியாகக் குறைந்து குணமாகிவிடும்.