அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும். முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர். நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் அவசரத் தன்மை கொண்டவை. குறிப்பாக மலம் ஒரு இருண்ட நிறத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அல்சரை குணப்படுத்தும் சில விதிமுறைகளை பார்ப்போம்.....
1. சிவப்பு முட்டைகோஸை சாறெடுத்து அருந்தலாம் அல்லது அப்படியே உண்ணலாம்.
2. தொடர்ந்தோ அல்லது மீண்டும் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டாலோ, அது அல்சரின் முதல் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே இந்த நேரத்தில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
3. ஒருவேளை மருந்துகள் சாப்பிட்டும், நிலைமை மோசமாக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளில் ஏதாவது ஒன்றை பரிசோதிக்க வேண்டும். - உயர் இரையக தொடர் (upper gastrointestinal (G.I) series): அல்சர் உள்ளதா என்பதை அறிய பேரியம் என்ற பானத்தை குடித்துவிட்டு x-கதிர்களை எடுக்க வேண்டும். - எண்டோஸ்கோப்பி (endoscopy): உணர்வற்ற நிலையில் இருக்கும் போது, மருத்துவர் உங்கள் வாய் வழியாக மெல்லிய குழாய் ஒன்றை செலுத்துவார். அக்குழாய் தொண்டை மற்றும் உணவுக்குழாய் மூலம் வயிற்றை சென்றடையும். அந்த குழாயின் முடிவில் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமரா மூலம் மருத்துவர் செரிமான பாதையை பார்த்து, அங்குள்ள ஒரு திசு மாதிரியை ஆய்வு செய்வார். - ஆன்டிபாடிக்களுக்கான ரத்தப் பரிசோதனையின் மூலம் எச்.பைலோரி (h.phylori) பாக்டீரியா உள்ளனவா என்பதை அறியலாம். - எச்.பைலோரி பாக்டீரியா இருக்கிறதா என்று அறிய மல பரிசோதனை செய்ய வேண்டும். - யூரியா என்ற பொருளை கரைத்து குடித்த பின், உங்கள் மூச்சை சரி பார்க்கும் மூச்சுப் பரிசோதனையை செய்ய வேண்டும்.
4. அல்சர் நோய் உள்ளதை உறுதி செய்த பின் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அல்சரை சரி செய்யலாம்.
5. புத்தம் புதிய பழ வகைகள், காய்கறிகள் போன்ற உயர் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், அல்சர் குணமாவது மட்டுமல்லாமல், அதனை வராமலே தடுக்கலாம்.
6. ஃப்ளேவோனாய்டுகள் கொண்ட உணவு மற்றும் சாறு வகைகளை சாப்பிட வேண்டும். ஆப்பிள்கள், செலரி, கிரேன் பெர்ரீஸ், பூண்டு மற்றும் வெங்காயம் போன்றவற்றிலும், சில வகையான தேநீர் வகையிலும், இந்த ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன.
7. காரசாரமான உணவை உண்ட பின் அல்சர் வலி அதிகரித்தால், அவற்றை நீக்கவும். காரசாரமான உணவுகளை உண்ணுவதால் அல்சர் வருவதில்லை என்று மருத்துவர்கள் இப்பொழுது கூறினாலும், சில ஆய்வுகள், இது போல் உணவு உண்ட பின் வலியின் அறிகுறி அதிகமாவதாக கூறுகிறது.
8. காபியை முழுமையாகவோ தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கார்போனேட் பானங்கள் மற்றும் காப்ஃபைன் நீக்கப்பட்ட பானங்களையும் நீக்க வேண்டும். இந்த பானங்கள் அனைத்தும் வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகரிக்கச் செய்து புண்களின் அறிகுறிகளை மிகவும் மோசமாக்கிவிடும்.
9. அல்சர் பூரணமாக குணமாகும் வரை மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அனைத்து சிகிச்சைகளும் முடிந்த பிறகு மிதமான மதுவை அருந்தலாம். ஆனால் மது அருந்தும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
10. அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற அல்சரின் அறிகுறிகளை கட்டுப்படுத்த தன்னிச்சை அமில முறிவுகளை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment