மூசாம்பர மெழுகு
(சூதகத்தை சரிசெய்து கற்பம் உண்டாகும்)
சரக்கு:
கரியபோளம் 1 விராகனிடை, பாவேந்திர போளம், 1-விராகனிடை, மிளகு கால் பலம், கறிமஞசள் கால் பலம், கருஞ்சீரகம் 1 பலம், கடுகு 1 பலம், பனைவெல்லம் 4 பலம்.
செய்பாகம்:
பனைவெல்லம் நீங்கலாக மற்றசரக்குகளை ஒரு சட்டியிலிட்டு இளஞ்சூட்டில் வெதுப்பி ஆறவிட்டு இடித்து கல்வத்திலிட்டு அதனுடன் பனைவெல்லம் கூட்டி அரைக்கவும். மெழுகுபதம் இல்லாது இருப்பின் தேனை துளித்துளியாக விட்டு 2 மணி நேரமரைத்து வழித்து சீசாவில் பத்திரப்படுத்தவும் வேளைக்கு 2 கடலை அளவு காலை மாலை 5 நாள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
ஸ்திரீகளுக்கு மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் வயிற்றுவலி அழுக்குசரியாக வெளிகாணாமல் இருப்பது குணமாகும். இந்தபிரயோகம் 5 மாதம் வரையில் வீட்டு விலக்கத்தில் கொடுக்கவும். சந்தான சித்தியுண்டாகும்.
1 comment:
எந்த நாட்களில் இதை உட்கொள்ள வேண்டும்.. தொடர்ந்து எடுத்து கொண்டால் மாதவிலக்கு பிருசனை தீருமா
Post a Comment