20160303

நரம்புத்தளர்ச்சி


நரம்புத்தளர்ச்சி நோய் ஏற்படுவதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உடலை சரிவரப் பேணாமல் காம, விகார, சுய இன்பத்தினால் ஏற்படுவது முதல் காரணம், மனதை நன்னிலையில் அமைத்துக் கொள்ளாதிருப்பது, இரண்டாவது காரணம் ஆகும். நரம்புத் தளர்ச்சியுண்டாவதற்கு 75 சதவீதம் மனந்தான் காரணமாயிருக்கின்றது. உடல் 25 சதவீதம் தான் இதில் சம்மந்தப்படுகின்றது. துன்பமயமான ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்து, நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், மூளை நாளங்கள் கொதிப்படைந்து, உடலிலுள்ள எல்லா நரம்புகளும் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சரிவர நடைபெறுவதில்லை. ஆதலால், உடலில் தவிர்க்க முடியாக சோர்வு, தளர்ச்சி, நடுக்கம், அயர்வு ஏற்படுகின்றது. இந்த தாழ்ந்த இரத்த ஓட்டத்தால் ஈரலிலும் அது சம்பந்தப்பட்ட பாகங்களிலும் இயக்கச் சிக்கல் ஏற்படுகின்றது.
ஆண்களைவிட பெண்களே அதிகமாக நரம்புத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகின்றார்கள். கணவன், குழந்தைகள், உறவினர்கள், நகைகள், துணிகள் இவைகளைப்பற்றி எந்நேரமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது பெண்களின் இயற்கையான குணமாயிருக்கின்ற படியினால் நரம்புத்தளர்ச்சி நோய் அவர்களுக்கு எளிதில் பற்றிக் கொள்கின்றது.
நரம்பு சோர்வு நோய் சாதாரணமாய் 20 வயது முதல் 50 வயதுவரை தோன்றும். வம்ச பரம்பரை வழியாகவும் இந்நோய் வருவதுண்டு. நீடித்த கவலை, அளவுக்கு மீறிய உடலுறவு, அதிகமான மூளை உழைப்பு, மனக்களைப்பு, சுயஇன்பம், உடலுழைச்சல், தீவிர சிந்தனை. இவ்வித காரணங்களால் நரம்புகள் சோர்ந்து, நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது.
ஞாபக மறதியும் ஒருவிதமான நரம்புத்தளர்ச்சி நோயின் அறிகுறியே. ஏடை குறைதலும், தூக்கமின்மை நோயும் இரத்த சோகை நோயும், எதிர்காலத்தைப் பற்றிய பய உணர்வும், வறுமையைப் பற்றிய அச்சமும், சித்தபிரமையும் இந்நரம்புத்தளர்ச்சியின் காரணமாக ஏற்படுவது உண்டு.
நரம்புத்தளர்ச்சியினால் இருதயம் பாதிக்கப்பட்டு, வியர்வையும், எரிச்சலும், படபடப்பும், வேதனையும் உண்டாகும். ஆண்கள் ஆண்மையிழந்து பேடித்தன்மை ஏற்படுவதுமுண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் சூதகக்கட்டும், சூதகம் அதிகமாய் வெளிப்படுவதும் கூட இந்நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாகத்தான்.
இந்நோய் உண்டாவதும், அது படிபடியாய் வளர்வதும், மிக்க விசித்திரமானது. ஆரம்ப காலத்தில், காலையில் படுக்கைவிட்;டு எழுந்திருக்கும்போதே, உடலும், உள்ளமும் ஒருவகை சோர்வு கொண்டிருக்கும். எக்காரியத்தில் ஈடுபடவும் வனம் இடந்தராது. வுpனாடிக்கொரு முறை கொட்டாவி வந்து கொண்டேயிருக்கம். எலும்பு மூட்டுகளில் ஒருவித இனந்தெரியாத குடைச்சல் ஏற்படும். அடிவயிறு லேசாக வலித்துப் போதிய மலக்கழிவு ஏற்படாது. மூளையின் செயல் மந்தித்து, தலைக்கனம் ஏற்படும். கை, கால் விரல்களின் நுனியில் நமச்சல் ஏற்படும். உள்ளங்காலும், உள்ளங்கைகளும் எரிவது போல் இருக்கும். நெஞ்சு லேசாக நடுங்குவது போன்றிருக்கும் எழுதும்போது, கைகளில் நடுக்கம் காணும். பேசும்போது வாய் குழறும், யாரைக் கண்டாலும் கோபம் கோபமாக வரும். வேளா வேளைக்குச் சரியானபடி பசியெடுக்காது. உண்ட உணவுகளும் சரிவர சீரணமாகாது. ஓயாது தலைவலி ஏற்படும். உடலுறவு வேட்கை அளவுக்கு மீறி ஏற்படு;ம். ஆனால் அதை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உடலில் இருக்காது. காற்றுக் குழாய்கள் சரிவர வேலை செய்யாமல் பெருமூச்சு வந்தபடியே இருக்கும். இந்த நரம்புத்தளர்ச்சி நோய் பல நோய்களின் தந்தையாக விளங்குகின்றது.
இந்நரம்புத்தளர்ச்சி நோய் நீங்க மனக் கோளாறுகளை நீக்கி அதற்கு மூல காரணமாக இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்த வேண்டும். எளிய தேகப்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தைச் செம்மை படுத்தி, நரம்புகளுக்கு வலுவூட்ட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும்.
சிகிச்சை
மன்மத லோக செந்தூரம், தாதுலிங்க செந்தூரம், அயவீர செந்தூரம், சந்திரோதய செந்தூரம், அசுவந்தி லேகியம் முதலிய உயர்ந்த மருந்துக்களை முறைப்படி கொடுத்து வர நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கி நல்ல குணமுண்டாகும்.

No comments: