காரணங்கள் :
– ஜீரணமின்மை,
– எண்ணெய் பதார்த்தங்கள்,
– நெய், எண்ணெய் அதிகம் பயன்படுத்துவது
– மாவு பண்டங்கள்,
– காரமான உணவு,
– அதிக கண் விழிப்பு,
– அதிக பிரயாணம்
அறிகுறிகள் : வயிற்றுக் கடுப்பு, வயிறு இறைச்சல், வாந்தி, வாய் குமட்டல், புளிச்ச ஏப்பம், வாந்தி வருவது போல் உணர்வு, மலத்துடன் சளி, இரத்தம், சிறுநீரைக் கட்டுப்படுத்தும், காது அடைத்தல், கண் சரியாக தெரியாமை.
மருத்துவம் : காட்டாத்திப்பூ சூரணம் மோரில் கலந்து சாப்பிடவேண்டும்.
மருந்து செய்முறை :
காட்டாத்திப்பூ சூரணம் தேவையானவை :
காட்டாத்தி பூ ¼ கிலோ
ஓமம் ¼ கிலோ
ஓமத்தை லேசாக வறுத்து இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்ய வேண்டும்.
காட்டாத்திபூவை இடித்து, சளித்து வஸ்திர காயம் செய்து இரண்டையும் ஒன்றாக நன்றாக கலக்கி தேன் அல்லது மோருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
1 comment:
Send your address please
Post a Comment