20160303

கருவணுவகத்தில் கட்டியும் தீர்வும்





முன்னுரை:
முனித இனத்தில் புதிய உயிர்கள் பால் இனச் சேர்க்கையின் மூலம் தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு புதிய உயிருக்கும் ஆண், பெண் எனும் இரண்டு பெற்றோர்கள் உண்டு. முட்டை எனப்படும் முட்டை செல்கள் பெண்ணின் உடலிலும், விந்தணு ஆணின் உடலிலும் தயாரிக்கப்படுகின்றன. ஒரு புதிய உயிரைத் தோற்றுவிப்பதற்கு ஆண், பெண் செல்கள் ஒன்று சேர வேண்டும்.
முட்டை செல்கள் உற்பத்தியாவதில் ஏற்படும் பிரச்சினைகளையும், கருவணுவகத்தில் ஏற்படும் கட்டிகயையும், அதற்கான தீர்வையும் இக்கட்டுரையில் ஆராய்வோம்.
கருவணுவகத்தின் அமைப்பு:
கருவணுவகம் என்பவை பாதாம் விதைகளின் அளவையும் அமைப்பையும் கொண்டுள்ள இரு சுரப்பிகள், கருப்பையின் இரு புறங்களிலும் பக்கத்திற்கொன்றாகவும், அகன்ற பந்தகத்தின் பின் பரப்பில் ஃபெல்லோப்பியன் குழாய் முனைகளுக்குக் கீழேயும் அமைந்துள்ளன. சுpனைப்பந்தகத்தின் மூலம் இவை கருப்பையுடன் இணைந்துள்ளன. இவை நாலரை செ.மீ நீளமும், இரண்டேக அரை செ.மீ அகலமும் 1 செ.மீ கனமும் உடையவை. சுமார் 40 ஆயிரம் பெண் முட்டைகள் இதில் அடங்கியுள்ளன.


கருப்பை இறக்கம் மற்றும் பெரும்பாடு:
இவற்றிற்கான மருந்துகளாக, அயக்கருப்பு, மாசி;காய்ச் சூரணம், அத்திப்பட்டைச் சூரணம், அசோகப் பட்டைச் சூரணம், ஒதியம்பட்டைச் சூரணம், நாவல்பட்டைக் கசாயம் போன்றவைகளும் மற்றும் துவர்ப்புச் சுவையுள்ள மருந்துகளும் தரலாம்.




கருப்பை புரளல்:
கருப்பை புரண்டு விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வலி உண்டாகும், கருத்தரிக்காது, இதற்கு 'அஷ;ட சூரணம்' மிக உயர்வான மருந்தாகும்.
கர்ப்பப்பை வளர்ச்சியின்றி சிறுத்து விடுமானால் மாதவிலக்கு நேரத்தில் வயிற்றுவலி உண்டாகும். கருத்தரிக்காது. இதற்கு உடல் வளர்ச்சிக்கும், இரத்த விருத்திக்கும் மருந்து கொடுப்பது அவசியம்.
இந்த வகையில், அயச்செந்தூரம், அயகாந்த செந்தூரம், பவழ பற்பம், சிலாசத்து பற்பம், திரிபலாதி சூரணம், திரிகடுகுச் சூரணம், அதிமதுரச் சூரணம் போன்றவைகளை மருந்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.





கருப்பைக்குழல் சதை அடைப்பு:
கருப்பைக் குழாயில் சதை அடைப்பு மற்றும் வீக்கம் உண்டாகி இருந்தால் சினையகத்தில் இருந்து கருமுட்டைகள் சரியானபடி கருப்பைக்கு வராமலும், ஆணின் உயிரணுக்கள் அதனைத் தொடாதவாறு இந்த அடைப்பு தடுக்கிறது. இதனைத் தகுந்த பரிசோதனை மூலமும் மற்றும் நாடிக்கணிப்பின் மூலமாகவும் அறிந்து, அதற்குண்டான மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நல்ல குணம் கிடைக்கும்.
சினையக பலவீனம்:
சினையக பலவீனம் இரண்டு காரணங்களால் உண்டாகும்.
1. உடலுக்குத் தேவையான ஊட்டமின்மை
2. அமிலத்தன்மையால் மாதவிலக்கு சரியாகத் தோன்றாமல் இருப்பது.
உடல் பலவீனத்திற்கு:
திரிபலாதி சூரணம், கரிசாலைச் சூரணம். அன்னபேதி செந்தூரம். நெல்லிக்காய் இலேகியம், தேற்றான்கொட்டை இலேகியம், வெண்பூசணிக் கிருதம் போன்ற மருந்துகள் சிறந்த பயனைத்தரும்.
அமிலத்தன்மை கட்டுப்பட:
திரிகடுகுச் சூரணம், பவழபற்பம், சங்குபற்பம், ஆறுமுக செந்தூரம், மகா வல்லாதி இலேகியம் போன்றவற்றைத் தகுந்த மருத்துவக் காண்காணிப்பின் பேரில் தரலாம்.




கருப்பை வீக்கம்:
வெளி உபயோகமாக
1. வல்லாரை இலையை வைத்துக் கட்டலாம்.
2. பிண்டத் தைலம் பூசலாம்.
உள்ளுக்கு மருந்து திரிகடுகுச் சூரணம், ஆறுமுக செந்தூரம் போன்றவைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

கர்ப்பப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி:
கீழாநெல்லிச் சூரணம், அறுகம்புல் சூரணம், சிறுகண்பீளைச் சூரணம், வெள்ளரிவித்தச் சூரணம், சிலாசத்து பஸ்பம், வெடி அன்னபேதி செந்தூரம போன்ற, வெப்பத்தைத் தணிக்கக்கூடிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.


கருப்பையைத் தாக்கும் நோய்களுக்கான மருத்துவம்;
பெண்குறி மற்றும் கருப்பையில் உண்டாகும் அரிப்பு, புண், கிர்த்தி இவைகளுக்கு கருடன் கிழங்குத் தைலம் மற்றும் கருடன் கிழங்குச் சூரணம் ஆகியவை சிறந்த பயன்தரும் மருந்துகளாகும்
கருடன் கிழங்குத் தைலம் செய்முறை:
• கருடன் கிழங்கு சூரணம் 100 கிராம்
• கருஞ்சீரகம் 25 கிராம்
• சுக்கு 25 கிராம்
• வாய்விளங்கம் 25 கிராம்
• மிளகு 25 கிராம்
• கார்போக அரிசி 25 கிராம்
• திப்பிலி 25 கிராம்
• சிறிய வெங்காயம் 25 கிராம்
• வாலுளுளை அரிசி 25 கிராம்
• விளக்கெண்ணெய் 25 கிராம்
ஒன்று முதல் எட்டு வரை உள்ள சரக்குகளை சுத்தம் செய்து கல், மண் முதலியவைகளை நீக்கி, சூரணித்து வைத்துக் கொள்ளவும்.
சுpறிய வெங்காயத்தை அரைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பொடித்து வைத்துள்ள சூரணக் கலவையில் வெங்காயச் சாறு ஊற்றிக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு, அடுப்பில் இரும்புக் கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிசறி வைத்துள்ள கலவையைப் போட்டு சிறு தீயில் எரித்து, நீர்ப் பசையில்லாமல் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: 1. தேக்கரண்டி அளவு, தினமும் 2 வேளைகள்.
புத்தியம்: உணவில் உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ளவும்.
கருடன் கிழங்குச் சூரணம் செய்முறை:
• கருடன் கிழங்கு வற்றல் 100 கிராம்
• வாலுளுவை அரிசி 25 கிராம்
• சுக்கு 25 கிராம்
• கருஞ்சீரகம் 25 கிராம்
• மிளகு 25 கிராம்
• வாய்விளங்கம் 25 கிராம்
• திப்பிலி 25 கிராம்
இவற்றை சுத்தம்செய்து நன்றாகக் காயவைத்து இடித்துத் தூள் செய்து கொள்ளவும்.
உட்கொள்ளும் அளவு: கால் முதல் அரை தேக்கரண்டி வரை.






No comments: