20160303

மருந்துகளின் வகைப்பாடு :




சித்தமருத்துவத்தில் 64 வகையான மருந்துகள் உண்டு.

32 உள் மருந்து

32 வெளி மருந்து

சூரணம் : (பொடி செய்தல்) சூரணம் என்பது மூலிகையின் இலை, தண்டு, பூ, வேர், காய், கனி போன்றவற்றை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திர காயம் (துணியால் சளிப்பது) செய்ய வேண்டும். இது 6 மாதங்கள் வன்மையுடன் இருக்கும்.

தைலம் : மூலிகை சாற்றில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சம அளவில் கலந்து கொள்வது (பல முறை காய்ச்சுதல் என்பது காய்ந்து கொண்டிருக்கும் தைலத்தை ஒரு குச்சியில் எடுத்து அனலில் காட்டினால் சொட, சொட என சத்தம் கேட்கும். தைலம் ஒரு வருடம் வன்மையுடன் இருக்கும்.

மனப்பாகு : மனப்பாகு என்பது மூலிகை சாறுடன் பனைவெல்லம் சேர்த்து காய்ச்சி தேன் பதத்தில் இறக்கி பத்திரப்படுத்தி பயன்படுத்துவது 3 மாதம் வன்மையுடன் இருக்கும்.

லேகியம் : லேகியம் என்பது மூலிகைகளுடன் மருந்து பொருட்களும், சர்க்கரையும் சேர்த்து காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் இறக்கி தேன் அல்லது நெய் சேர்த்து இறக்கி பயன்படுத்துவது (கம்பி பதம் என்பது காய்ந்து கொண்டிருக்கும் லேகியத்தை கரண்டி அல்லது கையில் எடுத்தால் கம்பி போல வரும்)

செந்தூரம் : செந்தூரம் என்பது பாசானம் மற்றும் உலோகங்களை மூலிகை சாறுடன் சேர்த்து செந்நிறம் காணும் வரை எரித்து பொடி செய்து வைத்துக் கொள்வது. 500 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

பஸ்பம் : பஸ்பம் என்பது பாசானம் அல்லது உலோகங்களை மூலிகை சாறில் அரைத்து வில்லை செய்து மண் சீலை செய்து காயவைத்து மருந்தின் அளவிற்கேற்ப விராட்டி புடமிட்டு எடுக்க வேண்டும்.

இது 900 ஆண்டுகள் வன்மையுடன் இருக்கும்.

குறிப்பு :
செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தனியாக சாப்பிடக்கூடாது. ஏதாவது ஒரு சூரணம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
செந்தூரம், பஸ்பம் இரண்டையும் ஒரு அரிசி எடை அளவுதான் சாப்பிடவேண்டும்.
செந்தூரம், பஸ்பம் இரண்டையும் தீராத வியாதிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். கை நீலக்கலரில் மாறினால் தீராத வியாதி என்பதாகும்.

கசாயம் : கசாயம் என்பது உலர்ந்த மூலிகை சரக்குகளை இடித்து நீர் விட்டு 8-ல் 1 பங்காக காய்ச்சி வடிகட்டி எடுப்பது. 3 மணி நேரம் வன்மையுடன் இருக்கும்.

No comments: