20160303

சேவகனார் தைலம் செய்முறை:


தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்

தோல் நோய்களுக்கு நிரந்தர தீர்வாகும் சேவகனார் தைலம்


வெண்புள்ளி நோய் அறிதல்:

உடம்பில் கை, கால், முகம், மறைமுக உறுப்புகளில் ஆரம்ப காலத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றி பின்பு உடல் முழுவதும் நிறம் மாறி, மயிர் வெண்மை நிறத்தை அடையும். இந்த வகை நோயாளிக்கு குறைந்த கால அளவு மருந்து உட்கொண்டால் போதும். முதலில், ஆசன வாய், உள்ளங்கால், உதடு, விரல்களில் நுனி இவைகளில் தோன்றினால் அவர்கள் அதிக நாட்கள் மருந்து உட்கொள்ள வேண்டும்.
பிரிவு:1
• கார்த்திகைக் கிழங்கு 100 கிராம்
• காட்டுள்ளிக் கிழங்கு 100 கிராம்
• முதியார் கூந்தல் 100 கிராம்
• பிரப்பன் கிழங்கு 100 கிராம்
• பறங்கிப்பட்டை 100 கிராம்
• வெள்ளாட்டு சாணி 100 கிராம்

பிரிவு:2
• புங்கை எண்ணை 200 மி.லி
• வேப்ப எண்ணை 200 மி.லி
• இலுப்பை எண்ணை 200 மி.லி
• ஆடணக்கு எண்ணை 200 மி.லி
• நல்லெண்ணை 200 மி.லி

பிரிவு:3

• வெள்ளைப்பூண்டு சாறு 1லிட்டர்
• பெருங்காயம் 50 கிராம்
• சுக்கு 50 கிராம்
• மிளகு 50 கிராம்
• திப்பிலி 50 கிராம்
• கற்கண்டு 50 கிராம்
செய்முறை:
பிரிவு 1ல் குறிப்பிட்ட மூலங்களை நன்றாக இடித்து பட்டையை நன்றாக சிதைத்து, நூறு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு, ஒரு மரத்து விறகால் எரித்து ஒரு லிட்டர் வரும் வரை நன்றாக எரிக்கவும். அந்த கசாயத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு, ஒரு பெரிய வாணலில் ஊற்றி, அதில் பிரிவு 3ல் உள்ள வெள்ளைப்பூண்டு சாறுடன் மற்ற பொருட்களைக் கூட்டி (சரக்குகள் அனைத்தையும் இடித்து சலித்த பின்), 2ம் பிரிவில் உள்ள எண்ணெய்ப் பொருட்கள் கலவையில் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி, நீர் சுண்டி வரும் பக்குவத்தில் கற்கண்டைப் பொடி செய்து போட்டு, மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும்.
மருந்தின் அளவு:
பெரியவர்களுக்கு 1 டீஸ்பூன்(5 கிராம்)
சிறியவர்களுக்கு 1ல்2 பாகம் டீஸ்பூன்(3 கிராம்)
மருந்துண்ணும் நெறி:
மருந்து உண்ணும் போது இறைச்சி, உலர்ந்த மீன், மொச்சை, கொள்ளு, புளி, புளிப்புச் சுவையுள்ள பழங்கள், பூசணி, கடுகு, எண்ணை, புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தவிர்க்க வேண்டும். உடலுறவு கூடாது.
குணப்படுத்த முடிவதும் முடியாததும்:
சேதில் உதிரும் நோய் உடல் முழுவதும் வியாபித்து கனத்து கரடு கட்டி இருப்பினும் குணமடையும். வெண்படை நோய் உடல் முழுமையும் பரவி, வெண்மையாகி, முழங்கால், கைகளில் கரடு ஏற்பட்டு புண்களாகி நீர்வடியும் பட்சத்தில் தீர்க்க முடியாது.

No comments: